Friday, 26 February 2016

தேர்விற்க்கென்று நன்றாகப் படித்தால் மட்டும் போதுமா?

Standard
வணக்கம்,

சகோதர-சகோதரிகளே..



தங்களிடம் நான் பகிர விரும்புவது என்னவென்றால், நன்றாக படிக்கிறீர்கள், அதிகப்படியான உழைப்பை கொடுக்கிறீர்கள். அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான தகுதியை வளர்த்து கொள்கிறீர்கள். சந்தோசம். ஆனால், இதை எல்லாம் தாண்டி நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. 


அது, உங்களிடம் உள்ள அனைத்து சான்றிதழ்களிலும், உங்கள் பெயர், உங்கள் தகப்பனார் பெயர், பிறந்த தேதி, மற்றும் சாதி வகுப்புகள் சரியாக உள்ளதா என்று ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏன் என்றால், நிறைய மதிப்பெண்கள் எடுத்த பலர் சான்றிதழ்களில் உள்ள கவனிக்கப்படாத தவறுகளினால் கலந்தாய்வில் நிராகரிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சான்றிழ்களில் தவறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் கொடுக்கும் கால அவகாசத்தில் உங்களால் புதிய சான்றிதழ்களை பெற இயலாது. எல்லாம் விழலுக்கு இரைத்த நீராகி விடும். எனவே இதனையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாதி சான்றிதழ் மிக முக்கியம்:
---------------------------------

சாதி சான்றிதழ் என்பது TNPSC மூலமாக அரசு வேலை பெற மிக முக்கியம் ஆகும். அதில் உங்கள் பெயர், தகப்பனார் பெயர், சாதி உட் பிரிவு முதலியவை சரியாக உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

Image may contain: text

பெண் தேர்வர்களுக்கு மட்டும்:
---------------------------------------------

குறிப்பாக, பெண் தேர்வாளர்கள் சாதி சான்றிதழை தங்களின் தகப்பனார் பெயரில் வாங்கி இருக்க வேண்டும். அது மட்டுமே TNPSC யால் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் கணவரின் பெயரில் இருந்தாலோ அல்லது வேறு ஒரு உறவினரின் பெயரை (உதாரணமாக தாத்தா, மாமா, சித்தப்பா) காப்பாளராக கொண்டு வாங்கி இருந்தால் அது TNPSC யால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. . நீங்கள் உங்களது தந்தையின் பெயரில் அல்லாத சாதி சான்றிதழை கொண்டு விண்ணப்பித்து தேர்வு எழுதி இருந்தால், உங்கள் தந்தையின் பெயரை கொண்ட புதிய சான்றிதழை வாங்கி கலந்தாய்வின் பொது கொண்டு செல்லலாம்.

நன்றி.

அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment