Thursday, 8 September 2016

TNPSC தேர்விற்கு எப்பொழுது விண்ணப்பம் செய்ய வேண்டும்?

Standard


TNPSC தேர்விற்கு எப்பொழுது விண்ணப்பம் செய்ய வேண்டும்? -------------------------------------------------------------------------------------------------- Image result for 404 error images தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையம் கடந்த (Sep 08, 2016) அன்று முற்றிலும் முடங்கிப் போனது. இதற்குக் காரணம் ஒரே நேரத்தில் பல பேர் நவம்பர் 06 அன்று நடை பெற்ற குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்ததுதான். TNPSC ஏதோ ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்க வில்லை. கிட்ட தட்ட முழுமையாக 30 நாட்களை கொடுத்து இருந்தது. அந்த 30 நாட்கள் கூட தேர்வாணைய இணைய தளத்தை காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை உள்ள அலுவலக நேரத்தில் தான் பயன்படுத்த முடியும் என்ற தேவை இல்லை. முழுமையாக 24 மணி நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் விண்ணப்பித்து இருக்கலாம். மணி கணக்கில் பார்த்தல் முழுமையாக 720 மணி நேரங்கள் போட்டியாளர்களின் விண்ணப்பத்திற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனை பயன்படுத்திக் கொள்ளாமல் இறுதி கட்ட 48 மணி நேரத்தில் மொத்தமாக விண்ணப்பம் செய்து இணைய தளத்தை முடக்கி, பின்னர் பல பேர் கலந்து கொள்ளும் வகையில் மீண்டும் அவகாசம் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப் பட்டது. இவர்கள் விண்ணப்பிக்க 6 மாதம் அவகாசம் கொடுத்து இருந்தாலும் கடைசி நேரத்தில் இப்படித்தான் செய்வார்கள். எனவே எந்த ஒரு விஷயத்திலும் கடைசிகட்ட நெருக்கடியை தவிர்த்து வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். நன்றாகப் படித்து இருப்பவர்கள், கண்டிப்பாக முன்பே விண்ணப்பிப்பார்கள். இது போல் கடைசி கட்ட நேரத்தில் விண்ணப்பிப்பவர்கள் வெறும் எண்ணிக்கை மட்டுமே. கால அவகாசம் கொடுக்காவிட்டால் உங்களால் தேர்விற்கு விண்ணப்பிக்கவே முடியாது. அப்படி என்றால், அறிவிப்பு வந்த உடனே விண்ணப்பிக்கலாமா என்று கேட்டல் அதுவும் கூடாது. ஏன் என்றால், இணைய சர்வர் பயன்பாட்டிற்கு வருவதற்கு இரு நாட்கள் வரை ஆகிறது, மேலும் ஆன் லைனில் பணம் கட்டும் போது, உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்ட் சேமிப்பு கணக்கில் இருந்து சேமிப்பு கணக்கிற்கு பணம் மாறும் முறையும் ஒழுங்கு அடைந்து இருக்காது. எனவே, உடனடியாக விண்ணப்பிக்கும் பொழுது தடங்கல்கள் நேரிடலாம். இப்படி நீங்கள் விண்ணப்பிக்கும் போது மீண்டும் மீண்டும் தடங்கல்கள் ஏற்பட்டு, நீங்கள் பல முறை முயன்று கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் எரிச்சல் மற்றும் சலிப்பின் காரணமாக உங்கள் தகவல்களை நீங்கள் தவற பதிந்து விடுவீர்கள். பின்னர், நான் தவறாக பதிந்து விட்டேன் என்ற மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். ஆகையால், எப்பொழுதும் அறிவிப்பு வந்த ஒரு வார காலத்திற்கு பின்னர் விண்ணப்பம் செய்வது சிறந்தது. கூடுதல் செய்தி: ஒரே மதிப் பெண்ணை பல பேர் எடுத்து இருந்தால், கீழ்கண்ட முறையில் TNPSC-யால் தர வரிசைக்கு முன்னுரிமை கணக்கிடப் படும். கல்வித் தகுதி: இரு மாதிரியான ஒரே மதிப் பெண்களை இருவர் பெற்று இருந்தால், ஒருவர் இளநிலை பட்டம், மற்றொருவர் முது நிலை பட்டம் என்றால், முது நிலை பட்டம் பெற்றவரே முதல் ரேங்க் பெறுவார். வயது: ஒரே மதிப் பெண் பெற்ற இருவரின் கல்வித் தகுதியும் ஒன்று என்றால், யாருக்கு வயது அதிகமோ, அவர் முதல் ரேங்கினைப் பெறுவார். முதல் விண்ணப்பம்: ஒரே மதிப் பெண் பெற்ற இருவரின் கல்வித் தகுதியும், வயதும் ஒன்று என்றால் இருவரில் யார் முதலில் தேர்விற்கு விண்ணப்பம் செய்து இருக்கிறார்களோ, அவரே முதல் ரேங்கினைப் பெறுவார். விண்ணப்பம் செய்யும் பொழுது, கணினி மையங்களிலோ அல்லது மற்றவரை வைத்து செய்வதை விட நீங்களே செய்வது சிறந்தது. உங்களை பற்றி உங்களை விட வேறு யாருக்குத் தெரியும். நன்றி. அன்புள்ள அஜி சென்னை.

0 comments:

Post a Comment