Thursday, 24 November 2016

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது ?

Standard
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது ?

Image may contain: one or more people, people on stage and outdoor

***சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது;

***வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது;

***வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது;

***அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது;

***அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது;

***வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது;

***வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது;

***உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது;

***தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது;

***அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது;

***தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது;

***சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது;

***விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது;

***அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது;

***குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது;

***கடமைகள் காத்துக் கிடக்க, பொழுது போக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது;

***நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது;

***அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத
தன்னம்பிக்கை இருக்கிறது.


--  யாரோ.

0 comments:

Post a Comment