Monday, 6 March 2017

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?:

Standard
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?:Image may contain: 1 person, sitting and table
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தர வரிசையில் முன்னணியில் இருப்பவர்களை, காலியிடங்களை பொறுத்து சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பார்கள். தற்சமயம் ஒரு காலி இடத்திர்ற்கு 1.5 பேர் என்ற விகிதத்தில் அழைக்கப்படுகிறார்கள். அதாவது 100 காலி இடங்கள் என்றால், 150 போட்டியாளர்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வராமல் இருப்பது, சான்றிதழ்களில் குறைபாடு, ஏற்கனவே வேலையில் இருப்பவர் வந்து கலந்து கொள்ளாதது போன்ற காரணங்களினால் சிலர் வர மாட்டார்கள்.
எனவே, மீண்டும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டும். இதன் காரணமாகவே 100 பணியிடங்களுக்கு, அதிகமாக 50 பேர் அழைக்கப்படுகிறார்கள். இந்த 100 பணியிடங்களில் தர வரிசையில்முதல் நூறு இடங்களில் இருப்பவருக்கே பணியில் சேர அதிக வாய்ப்பு. பின் வரிசையில் இருப்பவர்களுக்கு முன்னால் இருப்பவர்கள் வராத நிலையில் வாய்ப்பு கிடைக்கும். எனவேதான், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி கிடைக்கும் என்று நினைக்க கூடாது என்று அழைப்புக்கு கடிதத்தில் TNPSC குறிப்பிட்டு இருக்கும். நீங்கள் சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்து கொள்ள வில்லை என்றால் நீங்கள் அந்த குறிப்பிட்ட வேலையில் சேர தகுதி அற்றவராக அறிவிக்கப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. கலந்தாய்வின் போது கொண்டு செல்ல வேண்டியவை: ----------------------------------------------------------------------------------------- TNPSC அறிவுரை: ----------------------------- 01. உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சான்றிதழ் சரி பார்ப்பிற்கான அழைப்பிதழ். 02. SSLC MARK SHEET (For Evidence Date of Birth) 03. HSC MARK SHEET (For Evidence Date of Birth) 04. Birth Certificate ( இதற்க்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலே போதுமானது) Under Graduate: 05) Provisional Certificate (OR) Convocation Certificate Post Graduate: 06) Provisional Certificate (OR) Convocation Certificate 07) Community Certificate (Very Very Important) 08). PSTM Certificate 09). Transfer Certificate 10. நீங்கள் இறுதியாகப் படித்த பள்ளி / கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஒழுக்கம் மட்டும் நன்னடத்தைக்கான சான்றிதழ். (Conduct Certificate From Last Studied Institution) or TRANSFER CERTIFICATE (ANY ONE) இது மாற்று சான்றிதழிலேயே (TC) குறிப்பிடப்பட்டு இருக்கும். இருப்பினும், தனியாக ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுதல் நலம். எதுவாக இருந்தாலும், அது கீழ்கண்ட வார்த்தையுடன் இருக்க வேண்டும். His/Her Conduct and Character are Good. Conduct and Character இரு வார்த்தைகளும் வர வேண்டும். இந்த நன்னடத்தைச் சான்றிதழை, தற்சமயம் புதிதாக வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் அந்த நிறுவனத்தில் இருந்து படித்து வெளியே வரும்போது வாங்கி வைத்து இருந்தால் கூட பயன்படுத்தலாம். முக்கியக் குறிப்பு: ஒருவர் இறுதியாக தொலை தூரக் கல்வியில் பயின்று இருந்தால், அதற்கு முன்பு அவர் முறையாகப் (Regular Course) பயின்ற பள்ளி / கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்திடம் இந்த சான்றிதழைப் பெற வேண்டும்.) 11. குரூப் A மற்றும் குரூப் B தரமுடைய அரசு அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட நன்னடத்தைக்கான சான்றிதழ். ( Personal Conduct Certificate). முக்கியக் குறிப்பு: இந்த சான்றிதழை நீங்கள் எந்த தேர்விற்க்காக சான்றிதழ் சரி பார்ப்பிற்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்களோ, அந்த தேர்வின் அறிவிப்பு வந்த நாளுக்குப் பிறகு (After Notification Date) வாங்கி இருக்க வேண்டும். சான்றிதழ் சரி பார்ப்பிற்க்கான உங்களது அழைப்புக்கு கடிதத்தில் குறிப்பிட்ட இந்த தேதிக்குப் பிறகு வாங்கி இருக்க வேண்டும் என்று ஒரு தேதி குறிப்பிடப் பட்டு இருக்கும். அதனை நன்கு கவனத்தில் கொள்ளவும். இந்த தேதி ஒவ்வொரு தேர்விற்கும் மாறுபடும்.
மேலும் அச் சான்றிதழைத் தரும் அரசு அலுவலர் தனிப்பட்ட முறையில் உங்களை தனக்கு இத்தனை வருடங்கள் நன்றாகத் தெரியும் என்று குறிப்பிட வேண்டும். இது இரண்டு வருடங்களுக்கு குறைவாக இருத்தல் கூடாது. இது தேர்வு அறிவிக்கை வந்த தேதிக்கு பின் வாங்க வேண்டும், மேலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்வதற்கு முதல் நாள் கூட வாங்கலாம். ஆனால், தேர்வு அறிவிக்கைக்கு முன்னால் வாங்க கூடாது. 11. சிறப்பு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து இருந்தால் அதற்கான சான்றிதழ் அவசியம் வேண்டும். (For Ex: Physically Handicapped, Ex-Service Men, Destitute Widow, PSTM) i) மாற்றுத் திறனாளியாக இருப்பின், உடல் நலக் குறைபாட்டின் சதவிகிதம், மற்றும் அவரால் எந்த எந்த வேலைகளை செய்ய முடியும் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவ வாரியம் (Medical Board) கொடுத்த சான்றிதழ். ii) விதவையாக இருப்பின், அவரது மாவட்டத்தினைச் சேர்ந்த வருவாய் கோட்ட அதிகாரியிடம் (Revenue Divisional Officer) இருந்து பெறப்பட்ட ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ் பெறப்பட்டு கொண்டு செல்ல வேண்டும். இதனை, சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில், அவர் ஆதரவற்ற விதவையாக கருதப்பட மாட்டார். iii) முன்னாள் ராணுவத்தினருக்கான சான்றிதழ்கள். 12. அரசு ஊழியராக இருப்பின், அவர் சம்பந்தப்பட்ட துறையின் மேல் அதிகாரியிடமிருந்து எந்த ஆட்சபனையும் இல்லை என்ற சான்றிதழ். (No Objection Certificate from the Head of Department) 13. மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களையும், ஒளிப்பிரதி எடுத்து மூன்று தொகுப்பு (Two Sets of Xerox) வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரதியில் நீங்கள் அனைத்து சான்றிதழ்களிலும் உங்கள் சுய கையொப்பமிட்டு (Self Attested) அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். 14. அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 எண்ணிக்கை. ( இரண்டு போதும், கூடுதலாக வைத்துக் கொள்ளுங்கள்.) 15 மேற்கண்ட சான்றிதழ்கள் அனைத்தும் அடங்கிய ஒளிப்பிரதியில் (Xerox) உங்கள் சுய கையொப்பம் (Self Attestation) இட்டு வைத்து இருக்க வேண்டும். 16. Typewriting Certificates (Tamil Lower & Higher, English Lower & Higher) (If completed) குறிப்பு: தட்டச்சு தகுதில் உயர்நிலை சான்றிதழ் மட்டுமே கேட்பார்கள், இளநிலை சான்றிதழ் கேட்க மாட்டார்கள், இருப்பினும் இளநிலை சான்றிதழ் இருந்தால் கையில் வைத்துக் கொள்ளல் நலம். 17. Steno typist (Tamil Lower & Higher, English Lower & Higher) (If completed) எனது அறிவுரை: ------------------------- 1. Ur Aadhar card or any other photo id. 2. உங்களிடம் உள்ள அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் (Original Certificates) வைத்துக் கொள்ளுங்கள். இது தேவை இல்லை என்று நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு எதையும் வீட்டில் வைத்து விட்டு சென்னை வர வேண்டாம். கையில் இருந்தால், தேவைப்பட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 3. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரும்பொழுது ஆணாக அல்லது பெண்ணாக இருப்பினும் தனியாக வர வேண்டாம். வரும் பொழுது உங்களுக்கு உடல் நலம் கெடுதல், மயக்கம் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட்டால் துணைக்கு ஒருவர் தேவை. உங்கள் பெற்றோர் அல்லது நண்பர் ஒருவரை உடன் அழைத்து வரவும். முக்கியக் குறிப்பு: தேவையான சான்றிதழ்கள் என்பது தேவையான தொகுதிக்கு (GROUP EXAM) தகுந்தவாறு மாறும். எனவே உங்களுக்கு வந்துள்ள அழைப்புக்கு கடிதத்தை நன்றாகக் படித்து புரிந்து கொண்டு செயல் படவும். (வரும் சனியன்று, சான்றிதழ் சரிபார்ப்பில் ஒருவர் நிராகரிக்கப்பட காரணமான 10 நிகழ்வுகள் என்னென்ன என்பது பற்றி பாப்போம்.) நன்றி. அன்புள்ள அஜி சென்னை.

4 comments:

  1. thnaks & interview tips please share

    ReplyDelete
  2. Sir Nan PG Distance Educationla panen, nan UG Regular college la padichen, UG TC(original) universityla koduthuvitu PG institution la TC vagiten epo ena panalam. Regularla padicha college la vagina TC vachiirukanuma

    ReplyDelete