Friday, 10 March 2017

தட்டச்சர்களே உங்களுக்காக.......

Standard
ட்டச்சர்களே வரும் குரூப்-4 தேர்வு (2018) உங்களுக்கான 
முழுமையான வெற்றி வாய்ப்பு:

No automatic alt text available.

தற்சமயம் தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் உயர்நிலை (Both higher) முடித்து, அடுத்த குரூப்-4 தேர்விற்க்காக காத்து இருப்பவர்கள் கவனத்திற்கு:
இந்த வருடம் (2017) குரூப்-4 தேர்வு இல்லை. TNPSC- ன் வருடாந்திர அட்டவணையின் படி ஜனவரி 2018 ல்தான் அந்த தேர்வு வருகிறது.


தற்சமயம், நடந்து முடிந்த Group-4 தேர்வில், இளநிலை உதவியாளர்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்பினை மயிரிழையில் தவற விட்ட பலரும் இப்போது தட்டச்சு பயில தொடங்கி உள்ளனர். தட்டச்சில் தமிழ்-ஆங்கிலம் இரண்டிலும் உயர்நிலை முடித்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது இப்போது பலருடைய கவனத்திற்கு வந்துள்ளதே இதற்க்கு காரணம்.


ஆனால், இப்போது புதிதாக தட்டச்சு பயில தொடங்கி இருப்பவர்களால் வரும் குரூப்-4 தேர்விற்குள் இரண்டிலும் உயர்நிலை (Higher) முடிப்பது கடினம். இவர்களால் 2019 குரூப்-4 தேர்விலேயே முற்றிலுமாக முழு பலத்துடன் களம் இறங்க முடியும்.
இதன் காரணமாக தட்டச்சர் பதவிக்கும், இளநிலை உதவியாளர் பதவிக்கும் இடையேயான கட்ஆஃப் மதிப்பெண் வேறுபாடு வர வர குறைந்து வருகிறது. 2012 ல் 17 மதிப்பெண் என்ற அளவில் இருந்த வேறுபாடு கடந்த தேர்வில் 11 ஆக குறைந்து உள்ளது. இப்போது பலரும் தட்டச்சு பயில தொடங்கி உள்ள காரணத்தினால், இது வரும் 2020 முதல் 5-7 வரைதான் வரும் என்பது எனது கருத்து. . அதன் பின்னர் இந்த வேறுபடும் குறைந்து விடும்.


எனவே தற்சமயம், தமிழ்-ஆங்கிலம் இரண்டிலும் உயர்நிலை தட்டச்சு முடித்து இருப்பவர்கள், அல்லது வரும் ஆகஸ்ட் 2017 தட்டச்சு தேர்வின் மூலம் முடிக்க இருப்பவர்களுக்கு வர போகிற குரூப்-4 தேர்வு அரிய வாய்ப்பு.


சற்று போட்டி இல்லாத நிலையில், கொஞ்சம் கூட தொய்வு ஏதும் இன்றி முழுமையான உழைப்பைக் கொடுத்தால் 2018-ல் வெற்றி நிச்சயம். இதனைத் தவற விடும் பட்சத்தில் அடுத்து வர இருக்கும் தேர்வுகளில் தட்டச்சு பதவியை வாங்க கூட மிகுந்த போட்டியைச் சந்திக்க வேண்டியது இருக்கும்.


கவனத்தில் கொள்ளவும்.


நன்றி.


அன்புள்ள,
அஜி,
சென்னை

1 comment: