Wednesday, 15 March 2017

நிரந்தர பதிவில் நீங்கள் கொடுத்து இருக்கும், பதிவு எண் (SSLC register number) சரிதானா?

Standard
நிரந்தர பதிவில் நீங்கள் கொடுத்து இருக்கும், பதிவு எண் (SSLC register number) சரிதானா? கண்டு பிடிக்க ஒரு வழி இருக்கிறது.

TNPSC கடந்த 2015 ம் ஆண்டு தனது மென் பொருளை மாற்றியது. அப்போது நிரந்தர பதிவு முறையில், ஏற்கனவே நிரந்தர பதிவு செய்தவர்கள், தங்களின் கீழ்கண்ட விபரங்களை சமர்ப்பித்து உள்ளீடு செய்தால், அவர்களின் நிரந்தர பதிவு கணக்கானது பழைய மென்பொருளில் இருந்து புதிய மென்பொருளுக்கு மாறிடும் முறையினை கையாண்டது. அதன்படி, மாற, பழைய கணக்கினை (One time Account) வைத்து இருந்தவர்கள் தங்களது

1. Date of Birth

2. SSLC Register number (NOT certificate number)
3. SSLC month and year of passing
4. SSLC Education board


ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். நிரந்தர பதிவில் SSLC சான்றிதழ் எண் மட்டுமே இருக்கும். SSLC பதிவு எண்ணைப் பார்க்க முடியாது. இதனை, உறுதி செய்ய கீழ்கண்ட முறையினை பயன்படுத்தலாம்..

Title188607707

Step 1: Go to one time registration


Step 2: Go to Already registered candidates


Step 3: Go to Forget Login id/OTR id


Step 4: Pl give your following details correctly including registered mail id like:

a. Date of Birth
b. SSLC Register number 
c. ur mail id
d. your mobile number.


Step 5: Submit


இப்பொழுது உங்கள் Login ID Show ஆகும் பட்சத்தில் நீங்கள் கொடுத்து இருக்கும், SSLC register number சரி. இவ்வாறு உறுதி செய்ய இயலும்.


குறிப்பு: இவ்வாறு உறுதி செய்யும் பொழுது, உங்கள் பதிவு எண், பூஜ்யத்தில் ஆரம்பித்து இருந்தால், அதாவது உதாரணமாக 0785426 என்று இருந்தால், நீங்கள் சமர்ப்பிற்கும் பொழுது பூஜ்யத்தை எடுத்து விட்டு 785426 என்று கொடுக்க வேண்டும். முதலில் பூஜ்யம் இருப்பதனால், அதனை கணினி கணக்கில் கொள்ளாமல், Invalid User Details என்று உங்களுக்கு வரும். எனவே அதனை நீக்கி விட்டு சமர்ப்பியுங்கள்.


நன்றி

அன்புள்ள
அஜி,
சென்னை.

0 comments:

Post a Comment