Saturday, 1 April 2017

குரூப் 04 - கூட்டம் 16 இலட்சம், படிப்பது எத்தனை பேர்?

Standard
கடந்த குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பித்து எழுதியவர்கள் எண்ணிக்கை மொத்தம் 16 இலட்சம் பேர்.

Image result for people crowd images

இதில் ஓரளவு, புத்தகத்தை எடுத்து சீரியஸாக படித்து இருந்தால் குறைந்த பட்சம் 200 க்கு 150 கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க இயலும். இதற்க்கும் குறைந்தவர்கள் சரியாக படித்து இருக்க மாட்டார்கள்.
இந்த தேர்வில் 150 கேள்விகள் சரியான விடை அளித்துள்ளவரின் ஓவர் ஆல் ரேங்க் 45,000
இதனால், தேர்விற்கு என்று சற்று முயற்சி எடுத்து படித்தவர்களின் எண்ணிக்கை வெறும் 45,000 தான்.
எனவே, எப்போதும் கூட்டத்தினைப் பார்த்து பயப்பட வேண்டாம்.

சீரியசாகப் படித்துள்ள இந்த 45,000 பேரில்:
151-160 கேள்விகளுக்கு சரியான விடை அளித்து இருப்பவர்கள் 17,000 பேர் (over all rank range 45,000 - 28,000)

161-170 கேள்விகளுக்கு சரியான விடை அளித்து இருப்பவர்கள் 14,000 பேர் (over all rank range 28,000 - 14,000)

171-180 கேள்விகளுக்கு சரியான விடை அளித்து இருப்பவர்கள் 10,500 பேர் (14,000 - 3, 500)

181-190 கேள்விகளுக்கு சரியான விடை அளித்து இருப்பவர்கள் 3250 பேர் (over all rank range 3,500 - 250)

191 and above கேள்விகளுக்கு சரியான விடை அளித்து இருப்பவர்கள் 250 பேர் (Over all rank range 250-001 )

நன்றி 

அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment