Saturday, 1 April 2017

சான்றிதழ் சரிப்பார்ப்பில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கும் முக்கிய 10 நிகழ்வுகள்:

Standard
சான்றிதழ் சரிப்பார்ப்பில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கும் முக்கிய 10 நிகழ்வுகள்: No automatic alt text available.

1. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையைப் பயன்படுத்தி இருந்தால், 2. நிரந்தரப் பதிவில் 10ம் வகுப்பு பதிவு எண்ணை (Reg. number) தவறாக கொடுத்து இருந்தால் (நன்றாக கவனிக்க: பதிவு எண், சான்றிதழ் எண் (Certificate number ) அல்ல) குறிப்பு: நீங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களையும் சரியாக கொடுத்து இருந்தால் போதுமானது, இந்த தவறின் காரணமாக இது வரை யாரும் நிராகரிக்கப்பட வில்லை, அனால் TNPSC க்கு நிராகரிக்க உரிமை உண்டு என்பதனை நினைவில் கொள்ளவும். 3. சாதி, மதம் மற்றும் சாதி உள் பிரிவு தொடர்பான தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க போதிய அவகாசம் கொடுத்தும் சமர்ப்பிக்க வில்லை என்றால். குறிப்பு: உங்கள் சாதிச் சான்றிதழில் உள்ள சான்றிதழை அளித்த அதிகாரி மற்றும் அவரின் மாவட்டமும், அலுவலக முத்திரையில் (OFFICE SEAL) உள்ள மாவட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் கோவை மாவட்டத்தில் சான்றிதழ் வாங்கி உள்ளீர்கள் என்றால், பின்னர் கோவையின் ஒரு பகுதி, திருப்பூர் மாவட்டம் என பிரிந்து இருக்கும். அப்போது, சான்றிதழில் கையொப்பம் இட்ட அதிகாரி திருப்பூர் என இருக்கும், ஆனால் அலுவலக முத்திரை மட்டும் கோவை என்றே பழைய முத்திரையை இட்டுக் கொண்டிருப்பார்கள். இதனைக் கவனித்து சரியாக முத்திரை வாங்க வேண்டும். 4. சான்றிதழ் சரி பார்ப்பிற்கு வரவில்லை என்றால். 5. தேவையான கல்வி மற்றும் தொழில் நுட்பத் தகுதியை தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே (Before notification) முடிக்காமல், அறிவிப்பு க்கு பின் முடித்து இருந்தால் (After notification). 7. கல்வித் தகுதியில் தவறான தகவல்கள் மற்றும் போலியான சான்றிதழ்களை அளிக்கும் பொழுது. 8. தமிழ் வழியில் படித்ததாக விண்ணப்பித்து விட்டு பின்னர் அதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருந்தால். குறிப்பு: இதற்காக ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படும், போதிய அவகாசத்தில் தேவையான தகவல்கள் / சான்றிதழ்களை சமர்ப்பிக்க வில்லை என்றால் நிராகரிக்க உரிமை உண்டு. 9. அரசு ஊழியராக இருப்பின், தடையின்மைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அச் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் இருந்தால். 10. தட்டச்சர் (TYPEWRITING), சுருக்கெழுத்து தட்டச்சர் (STENO TYPIST) போன்ற விபரங்களை விண்ணப்பத்தில் பதிந்து விட்டு அதற்குரிய தொழில் நுட்பச் சான்றிதழ் இல்லை என்றால். இது தவிர விண்ணப்பம் மற்றும் சான்றிதழில் உள்ள எழுத்துப் பிழை, மற்றும் எண் பிழைகளுக்கு எல்லாம் கடிதம் எழுதிக் கேட்பார்கள். அதனால் பெரிய பாதிப்பு இல்லை. அவர்களே திருத்திக் கொள்வார்கள். இவை தவிர வேறு எதனாலும், எந்த பிரச்சினையும் வராது. கவலையின்றி படியுங்கள். வாழ்த்துக்கள். நன்றி. அன்புள்ள அஜி சென்னை.

11 comments:

  1. Hello sir , i have passed the typewriting exam but certificate innum varavillai nan Group 2 examku typing (technical qualification) apply panna mudiyuma? Pls help me sir?

    ReplyDelete
  2. Hello sir en sister bsc final year intha april la exam eluthi irukka ava group 2a exam ku apply panna mudiyuma

    ReplyDelete
  3. வணக்கம் சார்.
    10th +2 மார்க் சீட் laminate பண்ண ஏதும் பிரச்சனையா என்று தெளிவு படுத்த முடியுமா

    ReplyDelete
  4. வணக்கம் சார்.
    10th +2 மார்க் சீட் laminate பண்ண ஏதும் பிரச்சனையா என்று தெளிவு படுத்த முடியுமா

    ReplyDelete
  5. Physically challenged certificate enga vangurathu sir.... ethuvum form irukka..... result vanthathukku appuram vanguna ppthuma

    ReplyDelete
  6. Physically challenged certificate enga vangurathu sir.... ethuvum form irukka..... result vanthathukku appuram vanguna ppthuma

    ReplyDelete
  7. அப்பா பெயர் நாகராஜ் ஆனால் எனது பள்ளி மாற்றுச் சான்றிதளில் நாகராசு என உள்ளது, எனது மற்ற எல்லா ஆவணங்களிலும் நாகராஜ் என்று உள்ளது, இதனால் சான்றிதல் சரிபார்ப்பில் எதேனும் பிரச்சனை வருமா, என்ன செய்வது

    ReplyDelete
  8. Sir kindly explain 1st point clearly. I'm a SCA candidate. I have used fees concession for more than 5 times.

    ReplyDelete