Sunday, 2 April 2017

குரூப் 1 அல்லது குரூப் 2, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தயராவோர்-க்கு் -- மட்டும்:

Standard
குரூப் 1 அல்லது குரூப் 2, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தயராவோர்-க்கு் -- மட்டும்:


முதலில் தேர்வில் வெற்றி பெற்றமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள், உங்களது கடின உழைப்பிற்கு வணக்கங்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் TNPSC ல் இருந்து அழைப்புக் கடிதம் வரும், நீங்கள் பதிவிட்டுள்ள மின் அஞ்சல் (Mail Id) முகவரிக்கு தகவல் அனுப்புவார்கள், மற்றும் அலைபேசி எண்ணிற்கும் குறுஞ் செய்தி (SMS) வரும்.

உங்களுக்கு வரும் கடிதத்தில், முதல் நிலைத் தேர்விற்க்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த விண்ணப்பத்தை நிரப்பி அத்துடன், உடற் தகுதிச் சான்று (டி.எஸ்.பி பணிக்கு), இறுதியாக படித்த கல்வி நிலையத்தில் இருந்து வாங்கப்பட்ட உங்களுடைய நன்னடத்தை சான்று, கல்வித் தகுதிகள் தொடர்பான சான்றுகளின் நகல்கள் அதனுடன், குரூப் 1 தேர்விற்க்கான கட்டணம் 125 ரூபாய் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Certificates Required:

1. SSLC

2. HSC

3. Degree

4. Community

5. PSTM (If u mentioned in online Application)

6. Character (Conduct) certificate from last studied institution and another one from Gazetted officer.

7. Physical fitness (If anyone choose DSP)

8. Ex service Man certificate (If you are the ex-service man)

9. If you have any preferential Qualification.

10. DD 125 Rupees

11. Covering letter of candidates own Hand Writing ( it will upload in website)

குறிப்பு:

இத் தகவல் தங்களுக்கு, ஒரு முன் அறிவிற்காக பதிவிடப்பட்டு உள்ளது. உங்களுக்கு தேர்வாணையத்தில் இருந்து வரும் கடிதத்தில் அனைத்து விபரங்களும் தெளிவாக, சரியாக கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை நன்கு படித்து பின்பற்றுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

முதன்மை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நன்றி.


அன்புள்ள
அஜி
சென்னை

0 comments:

Post a Comment