Tuesday, 26 July 2016

குரூப் 4 (2016) - சிவாஜி - கமல் உரையாடல்

Standard

குரூப் 4 (2016) - சிவாஜி - கமல் உரையாடல்





சிவாஜி: வாங்க அப்பு, இன்னைக்கு நியூஸ் கேள்வி பட்டீகளா, நோட்டிபிகேஷன் பத்தி

கமல்: ஆமாங்க ஐயா,

சிவாஜி: சும்மா பத்து நாள் உட்காந்து படிச்சாலே பாஸ் பண்ணிடுவேன்னு சொன்னீகளே, இப்போ இந்த எக்ஸாம்மோட நிலைமை புரிஞ்சுதா.

கமல்: நல்லாவே புரியுது ஐயா, நான் பண்ண மிஸ்டேக்ஸ் ம் புரியுது, அதுக்கு தண்டனையா நான் இந்த எக்ஸாம் படிக்கிறதையே நிப்பாட்டலாம் ன்னு இருக்கேன்.

சிவாஜி: படிக்கிறத, படிக்கிறத நிப்பாட்ட போறீகளா? தப்ப குறைச்சுக்கிட்டு பாஸ் பண்ண வழிய தேடாம படிக்கிறத நிப்பாட்டுறேன்னு சொல்றது கோழைத்தனமில்ல.

கமல்: அதுக்காக,

சிவாஜி: அதுக்காக

கமல்: அதுக்காக, கிடைக்காத ஒன்னுக்காக டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறது முட்டாள்தனம் ன்னு நினைக்கிறேன் ஐயா.

சிவாஜி: இந்த முட்டா பயலுக கூட்டத்துல ஒருத்தனா இருந்துதான் உன் அப்பனும் கவெர்மென்ட் போஸ்டிங் வாங்கி இருக்கான்கிறத மறந்துடாத!

கமல்: அப்படி பார்த்தா, அதுல நானும் தான்யா ஒருத்தன், போதும்யா, 3 வருஷமா முக்கி முக்கி படிச்சு ஒன்னும் ஆகல, பிரண்ட்ஸ் எல்லாம் பாஸ் பண்ணிட்டாங்க ஐயா, இனிமேலும் என்னால முடியாதுயா.

சிவாஜி: 3 வருஷமா படிச்சதுக்கே இப்படி அலட்டிக்கிறீகளே அப்பு, 6 வருஷம் படிச்சு போஸ்டிங் வாங்குன பயலுக எல்லாம் நம்ம கூட்டத்துலதான் இருக்கானுங்க, நோட்டிபிகேஷன் விட்டுட்டா முதல் அப்பிளிகேஷன் போடுறதுல முக்கால் வாசி பயலுக நம்ம பயலுகதேன்.

கமல்: என்னால, இவ்வளவு வருஷம் எல்லாம் படிக்க முடியாதுயா, முடியல.

சிவாஜி: அப்பு, முதல்ல விதைங்க, தண்ணி ஊத்துங்க, உரம் போடுங்க, அப்புறம் தான் பழத்துக்கு ஆசைப்படணும். இங்குட்டு அப்பிளிகேஷன் போட்ட கையோட அங்குட்டு அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கனும்ன் னு நினைச்சீகனா எப்படி அப்பு. மெதுவாத்தான் வரும்.

கமல்: மெதுவான எம்புட்டு மெதுவா ஐயா, அதுக்குள்ள நான் ரிட்டயர்ட் ஆகிடுவேன் போலிருக்கே.

சிவாஜி: ஆவு, ரிட்டயர்ட் ஆவு, எல்லா பயயுள்ளைகளும் 58 வயசு ஆனா ரிட்டயர்ட் ஆகுற பயயுள்ளைகதேன். வேலை வெட்டி இல்லாம இருக்க, இல்ல னு சொல்லல. ஆனா, முன் வச்ச கால பின் வைக்காம இந்த எக்ஸாம் பாஸ் பண்ணி காட்றதுதான் உனக்கு பெருமை. உடனே பாஸ் பண்ணனும் னு நினச்சா எப்புடி, ஒரு மாசம் தமிழ் படிங்க, அடுத்த மாசம் ஹிஸ்டரி படிங்க, இப்படி படிச்சுக்கிட்டே போங்க அப்பு. இதனால எனக்கு ஒன்னும் பெருமை இல்ல. ஆனா நோட்ஸ் நான் வாங்கி கொடுத்தது.

கமல்: ஆனா வர வர சுட் ஆப் அதிகமா ஆகிட்டயே போகுதுங்க ஐயா, இது ஆகுற மாதிரி தெரியல ஐயா, என்ன விட்ருங்க ஐயா, நான் போறன்.

சிவாஜி: தாடியும், மீசையும் வச்சுக்கிட்டு என்ன எதுத்து பேசுற வயசு இல்ல.

கமல்: அப்படி இல்ல ஐயா.

சிவாஜி; பின்ன, பின்ன எப்படிக்கிங்ரேன். இது வரைக்கும் ஏன் பாஸ் பண்ணல னு ஒரு வார்த்தை கேட்டு இருப்பானா? ஒரு வார்த்தை.

கமல்: வேலை கவெர்மென்ட் லதான் பாக்கணும் கிறது இல்ல ஐயா, பிரைவேட் ல கூட பார்க்கலாம். நான் போறேன் ஐயா.

சிவாஜி: நான் நோட்ஸ் வாங்கி கொடுத்தேன், நீங்க படிக்கிறதுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்தேன், நான் என் கடமையை சரியாத்தான் பண்ணி இருக்கேன். நீங்க உங்க கடமையை பண்ணுனீங்களா, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் படிச்சீகளா, மாடல் எக்ஸாம் எல்லாம் எழுதி பாத்தீகளா, அடிக்கடி ரிவைஸ் பண்ணுனீகளா, எதுவுமே எல்லை. ஒரே பேஸ்புக் க்கும், வாட்ஸ்ஆப் பையும் நோண்டிக்கிட்டு அந்த பொண்ணோட சுத்திக்கிட்டு இருந்தா எப்படி?.

கமல்: ஆமாங்க ஐயா, தப்பு என் மேலதான் ஐயா.

சிவாஜி; அப்பு நான் சொல்றத கவனமா கேட்டுக்குங்க, இப்போ வர போற குரூப் 4 ல பாஸ் பண்ண போற பயலுக எல்லாம் யாரு, எல்லாம் குரூப் 2a, விஏஒ வ பார்டர் ல மிஸ் பண்ண பயலுகதான், நீங்க பார்டர் ல இருக்கீக, கிட்ட வந்துடீக, எல்லாம் கூடி வர நேரத்துல போறேன்ன்னு சொன்ன எப்புடி அப்பு?.

கமல்: நல்லா புரிஞ்சுதுங்க ஐயா, என்ன மன்னிச்சுடுங்க ஐயா, நல்லா படிச்சு பாஸ் பண்ணிடுவேன் ஐயா.

சிவாஜி; அப்படி சொல்லுங்க அப்பு, முதல்ல நீங்க அந்த பொண்ண ஊருக்கு அனுப்பிட்டு, படிச்சு பாஸ் பண்ற வழிய பாருங்க, பண்ணிடுவீக.

ஆக்கமும், வசனமும்
அஜி

சென்னை.

0 comments:

Post a Comment