Sunday, 2 April 2017

ஹிப் ஹாப் ஆதி - As a TNPSC Aspirant ( ஒரு கற்பனை )

Standard
ஹிப் ஹாப் ஆதி - As a TNPSC Aspirant ( ஒரு கற்பனை )




** குரூப் 4 எக்ஸாம் எழுதுற வரைக்கும் எல்லாம் நல்லாத்தாங்க போயிட்டு இருந்துச்சு. 

** சரி எக்ஸாம் ஈஸி, வேலை கிடைச்சுடும்ன்னு ன்னு சந்தோசப்பட்டா, வெளிய வந்த உடனே ஒருத்தன் நிச்சயம் கட்-ஆஃப் ஹை யா தான் இருக்கும் கன்பியூஸ் பண்றான். 

** அப்புறம் மறுநாள் சாயங்காலம் ஒரு குரூப் நிச்சயம் கட்-ஆஃப் 185 க்கு மேல ன்னு சொல்றாங்க.

** திடீர்னு இந்த பக்கம் பார்த்தா, இன்னொரு குரூப் அப்படி லாம் இல்ல, விஏஓ, குரூப் 2A ல சிலபேரு போய்டுவாங்க, அதனால 170 தான் வரும்னு சொல்றாங்க.

** இன்னொருத்தன் திடீர்னு மைக்ல குரூப்-1 ஏஜ் ரிலாக்சேஷன் வரலைனா ஆதி அண்ணன் தீ குளிப்பாருன்னு என்ன கேட்காம அவனா சொல்றான்.

** அப்போ கீழ இருந்து ஒருத்தன், நாம தனி நாடா ஆயாச்சுனா எப்படி வேகன்சி எல்லாம் பிஃல் பண்ணுவாங்கனு கேட்கிறான்.

** எனக்கு என்ன செய்றதுனே தெரியலைங்க.

** அப்புறம் ஒரு பெரிய குரூப் வந்து சதாம் ஹுசைன் படம்லாம் வச்சுக்கிட்டு ஆனுவல் பிளானர் சீக்கிரம் விடணும்ன்னு சொல்லுது,

** சத்தியமா என்ன நடக்குனே புரியலீங்க.

** அந்த சைடு என்னனா ஒருத்தன் இனிமே எல்லாம் நேர்மையா நடக்குமான்னு குண்ட தூக்கி போடுறான். அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

** நேத்து கூட ஒருத்தன் போன் பண்ணி குரூப் 4-ல இன்னும் இரண்டாயிரம் வேகன்சி அதிகமாயிருக்குன்னு சொல்றான்.

** சினிமா, அரசியல் மாதிரி போட்டி தேர்வுலயும் நிறைய வதந்தியா பரப்புறாங்க. நான் ரொம்ப ஹர்ட் ஆகிட்டேங்க

** என்ன என்னலாமோ பேசுறாங்க. யார் யார்லமோ உட்காந்து படிக்கிறாங்க.

** அந்த போராட்டத்தை விட இந்த தனிப்பட்ட போராட்டம் ரொம்ப கஷ்டமா இருக்குங்க. அதான் நான் இந்த வீடியோ போஸ்ட் பண்றேன்.

** யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க.


ஆக்கமும், சிந்தனையும்
அஜி,

சென்னை.

0 comments:

Post a Comment