Monday, 10 April 2017

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

Standard
திருவள்ளூர் மாவட்டம் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் உள்ள தற்காலிக பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது:

இது குறித்து மாவட்ட ஆட்சியாளர் திருமதி: சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளதாவது:

மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள தற்காலிக பணியிடம் ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்ப்பப் பட உள்ளது.

** மீஞ்சூர் வட்டத்தில் (திருவெற்றியூர் பகுதி ) ஒரு கிராம தொகுப்பு ஒருங்கிணைப்பாளர், பணியிடம் நிரப்பப்ப பட உள்ளது. இப்பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சியும், பேரிடர் அபாய மேலாண்மையில் பயிற்சியும் பெற்றவராக இருத்தல் வேன்டும்.

* கடலோரப் பகுதிகளில் பேரிடர் அபாய மேலாண்மை சார்ந்த களப் பணியில் குறைந்தது 3 வருடங்கள் அனுபவம் இருத்தல் வேண்டும்.

* மேலும் மக்களை ஒருங்கிணைக்கும் திறன், சமுதாய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கூடிய திறன் இருக்க வேண்டும்.

இதற்கு தொகுப்பு ஊதியமாக மாதம் 10,000 வழங்கப்படும்.

இது பற்றிய கூடுதல் விபரங்கள், மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய:


என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்று ஆவணங்களுடன் ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 15, மாலை 5:45 க்குள்.

நன்றி.

0 comments:

Post a Comment