Tuesday, 11 April 2017

கனவைத் துரத்திப் பிடித்த ஜனனி சுபா

Standard
கனவைத் துரத்திப் பிடித்த Janani Suba


அரசு வேலை வாங்க வேண்டும், நாமும் அரசு ஊழியர் ஆக வேண்டும். சமுதாயத்தில் நமக்கும் மரியாதை கிடைக்கும் என்று ஆசைப்படுபவர்கள் ஏராளம்.
ஆனால், எத்தனை பேர் அந்த ஆசையை இடைவிடாத முயற்சியாக மாற்றி, தடைக்கற்களை படிக்கற்களாக செதுக்கிக் கொண்டு, தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமும் - தன்னம்பிக்கை மூலமும் வெற்றிக் கனிகளைப் பறிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வெகு சொற்பமே.
அந்த வெகு சிலரில் இன்று தனது கடின உழைப்பு, மற்றும் ஆர்வம் இரண்டை மட்டுமே மூலதனமாக வைத்து கடந்த குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பவர்தான் அன்புத் தங்கை ஜனனி சுபா.
இன்று பெரும்பாலான சகோதரிகளின் எண்ணம், திருமணத்திற்கு முன்பே அரசு வேலை வாங்கிட வேண்டும் என்பதுதான். திருமணமானால் படிக்க முடியாது, நாம் கனவு வெறும் கனவாகவே போய்விடுமோ என்பதுதான்.
இதற்காக, திருமணத்தை கூட தள்ளிப் போட்டுகொண்டு செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேலை வாங்கி கொண்ட பிறகுதான் குழந்தை என்று சிலர்.
ஆனால் இவர் படிக்க ஆரம்பித்த பொழுது இவரது குழந்தைக்கு பிறந்து 6 மாதங்கள். தற்போது அதற்க்கு 6 வயது. இந்த ஐந்தரை வருடங்கள் பல்வேறு கடமைகளுக்கு நடுவில், இடைவிடாத முயற்சி மற்றும் போராட்டம் இன்று அவருக்கு வெற்றி மாலையை கொடுத்து இருக்கிறது.
13 வருடங்கள் மனைவியாக -- ஆறு வருடங்கள் தாயாக -- குடும்ப முன்னேற்றத்திற்காக தனியார் துறையில் பணி -- ஒரு சராசரி பெண்ணாக வீட்டு வேலைகள் -- குடும்பச் சுமைகள்.
இவற்றை எல்லாம் தாண்டி இன்று அரசு பணியாளராக உள்ள ஜனனி சுபா உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் - எந்த முயற்சியாக இருந்தாலும்.
இளநிலை உதவியாளருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து விட்டு, இன்று தட்டச்சருக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்க்காக காத்துக் கொண்டிருக்கும் அவர் சிறந்த அரசு ஊழியராக திகழ வாழ்த்துவோம்.
மேலும் ஆய்வக உதவியாளர் தேர்விலும் அவருக்கு வெற்றி.
ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையை, முழுமையான அர்ப்பணிப்பு எந்த வேலையைத் தேர்ந்து எடுப்பது என்று மாற்றி விடுகிறது.
நன்றி.
அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment