Thursday, 13 April 2017

ஆய்வக உதவியாளர்கள் ’வெயிட்டேஜ்’ வெளியீடு

Standard

ஆய்வக உதவியாளர்கள் ’வெயிட்டேஜ்’ வெளியீடு

மதுரையில் ஆய்வக உதவியாளர்கள் பணிக்கான நேர்காணலில் பங்கேற்றோரின் ’வெயிட்டேஜ்’     உட்பட முழு மதிப்பெண் விபரம் மாவட்ட கல்வித்துறை இணையதளத்தில் நேற்று வெளியானது.

மாவட்டத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 52 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு எழுதியவர்களில் அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில் 267 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

ஏப்.,9ல் முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் 213 பேர் பங்கேற்றனர். 

அவர்களுக்கு கல்வி தகுதி, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ’வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கப்பட்டது.

இதில் அதிகபட்சம் மதிப்பெண் அடிப்படையில் பொது பிரிவில் - 142, எஸ்.சி.எஸ்.டி.,- 131, அருந்ததியினர் - 119, பி.சி., - 132, எம்.பி.சி., -132 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதன் விபரம் ceomadurai.blogspot.com என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இன்று (ஏப்.,12) தல்லாகுளம் முதன்மை கல்வி அலுவலகத்தில் முழு மதிப்பெண் விபரப் பட்டியல் ஒட்டப்படும்.

காத்திருந்து...காத்திருந்து...

நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் 54 பேர் கடைசி நாளான நேற்று வரை பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க வருவர் என இருநாட்களாக கல்வி அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. இதனால் இறுதி பட்டியல் முடிவு செய்யப்பட்டது என கல்வி அதிகாரி தெரிவித்தார்.

நன்றி: தினமலர் 

6 comments: