Tuesday, 11 April 2017

தனியார் ஸ்டடி மெட்டீரியல்கள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா?

Standard


தனியார் ஸ்டடி மெட்டீரியல்கள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா?
போட்டித் தேர்வுக்காக பயிற்சி மையங்களில் வழங்கப்படும் "ஸ்டடி மெட்டீரியல்கள்" எனப்படும் வினா - விடை குறிப்பேடுகள் வெற்றியை தீர்மானிக்கின்றனவா எனில் நிச்சயமா இல்லை என்று சொல்லலாம்.
மெட்டீரியல்கள் வைத்திருக்கும் அனைவருமே போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதில்லை. அரசு பாட புத்தகங்களை மட்டுமே படித்து தேர்வில் வெற்றி பெற்றவர்களும் உண்டு.
அது ஒரு கிரியா ஊக்கி போன்றது. அவற்றை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்றால், ஒரு பாடத்திட்டத்தை முழுமையாக நீங்கள் பாட புத்தகங்களில் படித்த முடித்த பிறகு, பயன்படுத்த கூடியதுதான் மெட்டீரியல்கள்.
முதலில் மூலக்கதை என்னவென்று தெரிந்த பிறகுதான், ஒவ்வொரு காட்சியாக எடுத்து கோர்த்து, திரைப்படமாக மாற்ற முடியும்.
அதுபோலதான் போட்டித் தேர்வுக்கு நீங்கள் தயாராகும் விதமும் இருக்க வேண்டும். நீங்கள் எந்த தேர்வுக்கு தயாராகிறீர்கள். அந்த போட்டித் தேர்வுக்கு என்னென்ன பாடப் பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.
எந்த கல்வித் தகுதி தரத்திற்கு கேள்விகள் அமையும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
உதாரணமாக TNPSC குரூப் IV தேர்வு, VAO, Gr 2A, Gr 02 OT Prelim போன்ற தேர்வுகளுக்கு போன்ற தேர்வுகளுக்கு ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் புத்தகங்களை படித்தாலே பெரிய அளவில் மதிப்பெண் பெறலாம்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துவிதமான பாடங்களையும் ஆய்ந்தறிந்து படிக்க வேண்டும்.
பாடங்களின் இறுதியில் குறிப்பிடப்பட்ட வினாக்களுக்கான விடைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் கட்டம் கட்டி சுட்டி காட்டப்பட்டுள்ள பகுதிகளையும், தடிமனான எழுத்துகளில் குறிப்பிட்டப்பட்டுள்ள வார்த்தைகளையும் ஊன்றி கவனித்து படிக்க வேண்டும்.
ஒரு பாடத்தை முழுமையாக படித்து, அதில் எப்படியெப்படியெல்லாம் கேள்விகள் வரக்கூடும் என படிக்கும்போது சிந்தித்தறிந்து படிக்க வேண்டும்.
இதற்க்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, ஏற்கனவே TNPSC தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்வி மற்றும் பதில்களை நன்கு படித்து, கேள்விகள் எப்படி எவ்வாறு வருகின்றன என்று தெரிந்து இருக்க வேண்டும்.
புத்தகத்தின் ஒரு பக்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் எவ்வாறு எல்லாம் கேள்விகள் அமையலாம் என்ற கற்பனைத் திறன் மற்றும் ஆர்வம் வேண்டும். அது மட்டும் அமைந்து விட்டால், நீங்களே அதன் அடிப்படையில் முழு பாடத் திட்டத்தையும் படித்துக் கொள்ளலாம்.
எந்த ஒரு பாடத்தையும் தவிர்த்து விடாமல் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும். இதுதான் முக்கியம்..
இது முக்கியமில்லை என பாகுபடுத்தி படிக்க கூடாது.மொழிப் பாடத்தினை தவிர மற்ற பாடங்களுக்கு TNPSC பாடத் திட்டங்களை பின்பற்றி படிக்கவும்.
விரைவில் போட்டித் தேர்வில் வெற்ற பெற வேண்டுமானால் கண்டிப்பாக ஓராண்டு முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் அவசியம்.
ஆய்ந்தறிந்து படித்தால் மீண்டும் மீண்டும் அந்தந்த பாடங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. புரிந்துணர்வு மிக மிக முக்கியம்.
பாடத்தில் உள்ள வார்த்தைகளை புரிந்து கொண்டு, படித்தால் அது எதற்காக குறிப்பிடப்பட்டுள்ளது, எதை குறிப்பிடுகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
தனியார் மெட்டிரியல்களை சமச்சீர் புத்தகத்தினை படிக்க நேரம் இல்லாதவர்க்கும் (அதாவது புதிதாக தேர்வு சமயம் படிக்காத தொடங்கியவர்கள்) , அல்லது சமசீர் புத்தகத்தினை நன்கு படித்து மேலும் சில பொதுவான தகவல்கள் தேவைப்படுவோரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி
அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment