Sunday, 2 April 2017

TNPSC Annual Planner (2017) - சொல்லும் செய்தி

Standard
வணக்கம் சகோதர-சகோதரிகளே, 

Image result for hard work images

நான் என்னிடம் Inbox-ல் கலந்துரையாடிய பலபேரிடம் சொன்னதைப் போல் இந்த வருடம் (2017) குரூப்-4  வருடாந்திர திட்டத்தில் (Annual Planner) இல்லை. இனி குரூப் - 4 தேர்வு , 2018 ல் தான். எனவே இனி வருகிற வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள். அதிக காலி இடங்களைக் கொண்ட, கடந்த குரூப்-4 தேர்வினை கவனக் குறைவாக எடுத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இது ஒரு பாடம். 

ஒரு வாய்ப்பு
ஒரு முயற்சி
ஒரு வெற்றி

என்ற ரீதியிலயே உங்கள் பயணம் இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அனைத்தும் பயன் இல்லாமல் போய்விடும். உங்களுக்கு தேவை ஒரு காலியிடம் தானே, காலியிடங்கள் குறையும் பொழுது உழைப்பை மேலும் அதிகரியுங்கள், வேறு வழியே இல்லை. சோதனையின் இடையே சாதனை படைத்துப் பாருங்கள், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வீர்கள்.

மண்ணின் அழுத்தம் காரணமாகத்தான் கரியும் வைரமாக மாறுகிறது, மண் அழுத்த வில்லை என்றால் அது கடைசி வரை கரிதான். உங்களை வைரமாக மாற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக நினைதுக் கொள்ளுங்கள்.

600 காலியிடங்கள் இருந்தால் அதில் ஒருவராக வர வேண்டும் என்று நினைக்காமல், எப்போவும் டாப் ரேங்க் வர வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். குறைந்த பட்சம் முதல் 100-க்குள் வர முயற்சி செய்யுங்கள்.

உழைப்பிற்கு தகுந்த நல்ல முடிவு வரவில்லை என்றால்,
நல்ல முடிவுக்கு தகுந்த உழைப்பினைக் கொடுக்க வேண்டிய தருணம் இது.

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.


அன்புள்ள
அஜி

சென்னை.

0 comments:

Post a Comment