Sunday, 2 April 2017

TNPSC, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு படிக்கிறீங்களா? அப்போ சினிமா பாருங்க.

Standard
TNPSC, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு படிக்கிறீங்களா?




வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் அவசியம் தான். அதற்காக எப்போதும் புத்தகத்தையே வைத்துக் கொண்டு இருக்காதீர்கள். இது உங்களுக்கு மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தந்து உங்கள் முயற்சியை வீணடிக்கும். நாள் ஒன்றிற்கு 6 மணி நேரம் படித்தாலே போதுமானது. வேலை பார்த்துக் கொண்டு படித்தால் 4 மணி நேரம், முழு நேரமும் போட்டித் தேர்வு தயாரிப்பில் இருந்தால் 8 மணி நேரம் போதும்.
நீங்கள் எப்பேர் பட்ட கடின உழைப்பாளியாக இருந்தாலும், படிப்பில் அவ்வோப்போது சோர்வு வரத்தான் செய்யும். அந்த நேரங்களில், புத்தகத்தையும்-படிப்பையும் விட்டு சில மணி நேரங்கள் அல்லது ஒன்றிரண்டு நாட்கள் விலகி இருந்து மீண்டும் படிக்கத் துவங்குங்கள். நல்ல பலன் கிடைக்கும். படிக்க விருப்பம் இல்லாத நேரங்களில் அல்லது நாட்களில், திரைப்படங்கள் பார்ப்பது மனதிற்கு புத்துணர்ச்சியும், சற்று மூளைக்கும்-மனதிற்கும் ஓய்வாக அமையும். அதற்காக, பைரவா, தல 57, கொடி, சைத்தான் என்று போய்விடக் கூடாது. போட்டித் தேர்வர்கள் பார்ப்பதற்கு என்று கீழ்கண்ட படங்கள் உள்ளன. அதனைப் பாருங்ககள்

ரிலாக்ஸ் பண்ண மாதிரியும் ஆச்சு, படிச்ச மாதிரியும் ஆச்சு. நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.

01. வீர பாண்டிய கட்ட பொம்மன் (சிவாஜி)

02. கப்பலோட்டிய தமிழன் (சிவாஜி)
03. பாரதி (சாயாஜி ஷின்டே)
04. காரைக்கால் அம்மையார் (முத்துராமன், லட்சுமி)
05. பூம்புகார் (எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி)
06. ராஜ ராஜ சோழன் ( சிவாஜி)
07. காமராஜ் (இது முரளி நடிச்ச காமராஜ் அல்ல, பெருந்தலைவர் காமராஜ் பற்றிய படம் :-) )
08. திருவிளையாடல் (சிவாஜி, சாவித்ரி)
09. மணிமேகலை
10. கர்ணன் (சிவாஜி, அசோகன்)
11. ராஜ தேசிங்கு (எம்.ஜி. ஆர்)
12. அம்பிகாபதி (சிவாஜி)
13. ராஜரிஷி (சிவாஜி, பிரபு)
14.சம்பூர்ண ராமாயணம் (என்.டி.ராமராவ், சிவாஜி )
15. லவ குசா
16. சரஸ்வதி சபதம்
17. பக்தப் பிரகலாதா (ஆர்.எஸ். மனோகர்)
18. காந்தி (பெங் கிங்ஸ்லி)
19. ராமானுஜன்
20. ஸ்ரீ கிருஷ்ண லீலா (ஆர்.எஸ்.மனோகர், என்.டி.ராமராவ்)
21. திருநாவுக்கரசர் (சிவாஜி)

22. அவ்வையார்
23. அம்பேத்கர் (மம்முட்டி)
24. (கே.பி.சுந்தராம்பாள்)


இதில் இன்னொரு விஷயம் என்ன வென்றால், பூம்புகார் படத்திற்கு கலைஞர் கதை-வசனம் எழுதி இருப்பார். படம் தொடங்கும் பொழுது இப்படத்தினை பற்றிய முன்னுரையை ஒரு 10 நிமிடங்கள் கூறுவார். அதிலேயே போட்டித் தேர்விற்க்குத் தேவையான நிறைய விஷயங்கள் கிடைக்கும். பூம்புகாரை, கரிகால் சோழனுக்கு பரிசாக கொடுத்தது அவந்தி மன்னன், பூம்புகார் பட்டினப் பாக்கம், மருங்கூர்பாகம், நாலங்காடி என்று மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது, இளங்கோ வடிகளுக்கு சேர இளவல், செந்தமிழ் வித்தகர் போன்ற பெயர்கள் இருந்தன போன்ற பாடப்புத்தகத்தில் இல்லாத தகவல்களைக் கலைஞர் கூறுவார். நான் மேலே கூறியுள்ள படங்களில் இருந்து தேர்வில் கேட்கப்பட்டு இருந்த சில கேள்விகளும், அதற்கான விடைகளும்.

1. கோவலன், மாதவி பூம்புகாரில் இருந்து மதுரை வந்த பொழுது துணையாக வந்தவர் யார்? -- கவுந்தி அடிகள்

2. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன? - புனிதவதி

3. வ.வு.சி க்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனையை ஆங்கில அரசு அளித்தது? -- 40 வருடங்கள்

4. காமராசர் விடுதலை அடைந்த பிறகு யாருடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்? - சத்யமூர்த்தி வீடு

5. கண்ணகிக்கு சிலை அமைத்த சேர மன்னன் யார்? -
சேரன் செங்குட்டுவன் (அல்லது) கடற் பிறகோட்டிய செங்குட்டுவன்

6. சிலப்பதிகாரத்தினை எழுதும்படி இளங்கோவடிகளை வேண்டியவர் யார்? - சீத்தலைச் சாத்தனார்

7. மணிமேகலைக்கு முன்பு அமுத சுரபி யாரிடம் இருந்தது? - ஆபுத்திரன்

8. சகுந்தலைக்கு, துஷ்யந்தனை மறக்கும்படி சாபம் விடுத்தது யாரு? - வசிஷ்டர்

9. ராமனின் சகோதரர்கள் யார்? - இலக்குமன், பரதன், சத்ருகன்

10. விருச்சிக முனிவர் யாருக்கு பசி சாபம் அளித்தார்? - காய சண்டிகை (நினைவு: பசியால் காய்ந்த சண்டிகை ஆனாள்)

11. ராமனை காட்டிற்கு செல்லுமாறு நேரடியாகக் கூறியவர் யார்? - கைகேயி

12. கே திட்டத்தின் மூலம் காமராசர் தனது பதவியைத் துறந்த ஆண்டு? - 1963

13. பாரதி ஆங்கில அரசின் நடவடிக்கைக்கு பயந்து எங்கு தப்பிச் சென்றார்? - பாண்டிச்சேரி

14. சிவன் யாருக்கு பதிலாக பிட்டு சுமந்தார்? - வந்தி எனும் கிழவி

15. வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு தண்டனை கொடுத்த அதிகாரியின் பெயர்? - பாணர் மென்

16. வீரபாண்டிய கட்ட பொம்மன், ஜாக்சன் துரையைச் சந்தித்த பொழுது அவர் எந்த நகரத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்? - திருநெல்வேலி

17. வீரபாண்டிய கட்ட பொம்மன் ஜாக்சன் துறையைச் சந்தித்த இடம் எது? - இராமநாதபுரம்

18. கண்ணகிக்கு தவாறான தீர்ப்பு அளித்த மன்னனின் பெயர் என்ன? - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

19. ராமானுஜம் பிறந்த ஆண்டு? - 1887

20 கோவலன், கண்ணகியை யாரிடம் அடைகலப் படுத்தினான்? - மாதரி எனும் இடையர் குல மூதாட்டி.

இவை எல்லாம், தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு புத்தகத்தில் உள்ளன. இருப்பினும் படமாக பார்க்கும்போது தனி சுகம்தானே. நாமும் ஓய்வு நேரத்தினை உருப்படியாக செலவழித்த மன நிறைவு. காட்சிகளாகப் பார்க்கும் பொழுது மனதிலும் நிற்கும். படிக்கிறதையும் அனுபவிச்சு என்ஜாய் பண்ணி படிங்க.

அன்புள்ள
அஜி
சென்னை.


2 comments:

  1. அருமையான பயனுள்ள பதிவு..

    ReplyDelete