Saturday, 1 April 2017

TNPSC போட்டியாளர்கள் ஏமாற வேண்டாம்.........

Standard
அன்பார்ந்த TNPSC சொந்தங்களே,

இனிய மாலை வணக்கம்,

நான் தற்செயலாக இன்று இணையத்தில் உள்ள சில வலைத் தளங்களுக்கு சென்று பார்வை இட நேரிட்டது.


இத்தளங்கள், TNPSC போட்டி தேர்வாளர்கள் நிரந்தர பதிவு எண் (One Time Registration), அல்லது தனிப்பட்ட வேலைகளுக்கு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது ஏற்படும் தவறுகளை (அதாவது, பெயர் தவறு, பிறந்த தேதியில் உள்ள தவறு, சாதி பிரிவில் தவறு, சாதி உட்பிரிவில் தவறு, சான்றிதழ்களின் எண்களை பதிவு செய்யும்போது ஏற்படும் தவறுகளை இங்கு பதிவு பண்ணினால் சரி செய்து தரப்படும் என்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றில், ஏராளமான போட்டியாளர்கள் தங்களின் தவறுகளை கண்ணீரும், கம்பலையுமாக குறிப்பிட்டு எப்படியாவது சரி செய்து தருமாறு பதிவு செய்து இருக்கிறார்கள்.

இத்தகைய தவறுகளால் தங்களால் நிரந்தர பதிவு எண்னை முறையாக முழுமை செய்ய முடியவில்லை என்றும், தங்களால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றும் பதிவு செய்துள்ளனர்.

சிலர், நான் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது அனால் TNPSC- ல் இருந்து எந்தஒரு முறையான பதிலும் வரவில்லை என்று ஆணையத்தின் மீது குறை கூறி உள்ளனர்.

அதிலும் பெரும்பாலான போட்டியாளர்கள் தங்களின் அலைபேசி எண்களை குறிப்பிட்டு உள்ளார்கள். அதில் சிலருக்கு கடந்த வாரம் அழைப்பு வந்து உள்ளது. அந்த அழைப்பில் பேசியவர், தான் TNPSC இலிருந்து பேசுவதாகவும் தங்களின் புகாரை சரி செய்ய வேண்டும் எனில், ரூ. 50 தேவைப்படும் என்றும் அதனை TNPSC தங்களின் வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளும் என்றும் குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களின் ATM அட்டை எண் மற்றும் PIN எண்னையும் கேட்டு உள்ளார்கள். அவர்களும் கொடுத்து உள்ளார்கள்.

எனது சிற்றறிவிற்கு எட்டியவரை இந்த வலைத்தளங்கள் TNPSC -ன் அதிகாரப் பூர்வ வலைத்தளம் அல்ல. இத்தகைய தவறுகளை இங்கு பதிவு செய்தால், சரி செய்து தரப்படும் என்று TNPSC எங்கும், எப்பொழும் அறிவிக்கவில்லை.
நிரந்தர பதிவு எண், மற்றும் விண்ணப்பத்தில் தவறு செய்தால் அதற்கு வின்னப்பதாரர்களே முழு பொறுப்பு என்றும் அதனை சரி செய்ய முடியாது என்றும்,சரிசெய்ய வாய்ப்பும் இல்லை என்றும் TNPSC அறிவித்துள்ளது.

மேலும் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் தொடர்பு கொள்ள TNPSC தளத்தில் அதிகார பூர்வ தொழில் நுட்ப குழுவின் மின் அஞ்சல் (Technical Team Mail Id ) மற்றும் தொடர்பு எண் கொடுக்க பட்டுள்ளது.

technicalhelp@tnpscexams.in

அப்படி இருக்கும்பொழுது, இது போன்று தவறுகளை செய்து மன உளைச்சலில் இருப்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் பணம் பறிக்கும் காரியத்தை செய்து கொண்டுள்ளது.

எனவே, நீங்கள் அரசு வேலைக்கு செல்கிறீர்களோ இல்லையோ, இது போன்ற திருட்டு கும்பலிடம் தங்களின் பணத்தை இழந்து மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


முடிந்த அளவு இந்த செய்தியினை பகிருங்கள், நம்மால் முடிந்த அளவு யாரும் ஏமாறாமல் தடுப்போம்.
நன்றி.

TNPSC INSTRUCTION REGARDING ONE-TIME REGISTRATION:
---------------------------------------------------------------------------------


1. Please note that all the particulars mentioned in the online application including Name of the Candidate, Post Applied for, Communal Category, Date of birth, Address, Email ID, Centre of Examination etc.

will be considered as final. However, candidates can modify certain
fields till the date specified for applying online. Certain fields are fixed and cannot be edited even before the closing date. Candidates are hence requested to fill in the online application form with utmost care as no correspondence regarding change of details will be entertained.

ஒரு குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் தரும் பெயர், விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், சாதிப்பிரிவு, பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் முகவரி,தேர்வு மையம் போன்ற விவரங்கள் இறுதியானவை என கருதப்படும்.

இருப்பினும் சில விவரங்கைள தேர்வுக்கு விண்ணப்பிக்க கொடுத்துள்ள இறுதிநாள் முன்னரும் கூட மாற்ற முடியாது. எனேவ விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். நிரந்தரப்பதிவு அல்லது இணைய வழி விண்ணப்பம் ஆகியவற்றில் மாற்றம் செய்ய கோரி பெறப்படும் எந்தெவாரு கோரிக்கையும் பrசீலிக்கப்படமாட்டது.

2. All candidates have to furnish their correct SSLC Register Number, Month and Year of Passing and Name of the Board, which issued the certificate. Any details found to be wrong, the One Time Registration and Online Application are liable for rejection at any stage.

புதிதாக பதிவு செய்பவர்களும் ஏற்கனேவ பதிவு செய்த விண்ணப்பதாரர்களும் உள் நுழையும் போது எஸ்.எஸ்.எல்.சி பதிவு எண், தேர்ச்சி பெற்ற வருடம் மற்றும் மாதம், சான்றிதழ் வழங்கிய குழுமம் ஆகிய தகவல்கைள சரியாக பதிவு செய்ய வேண்டும். மேற்படி விவரங்கள் தவறாக இருப்பின் நிரந்தரப் பதிவும், தேர்வுக்கான விண்ணப்பமும் எந்தெவாரு நிலையிலும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

அன்புள்ள
அஜி
சென்னை.

0 comments:

Post a Comment