Tuesday, 11 April 2017

TNPSC தேர்வான மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு..

Standard
நன்றி: திரு கோபி செல்வராஜ் 

வணக்கம் நண்பர்களே,      

நேற்று நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் போது நேரில் பார்த்து மனவேதனையுடன் பதிவிடுகிறேன்.. நடக்கவே முடியாத.. கையில் குழந்தை போல் தூக்கிவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சரியான வழிகாட்டி விழிப்புணர்வு இல்லாமல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மட்டும் எடுத்து வந்தனர்.

 ஆனால் அவர்களிடம் மாவட்ட அரசு மருத்துவனையில் உள்ள மூன்று மருத்துவக்குழு அடங்கிய மருத்துவ அமர்வு வழங்கிய சான்றிதழ் TNPSC ஆல் கேட்கப்பட்டது  எனவே அவர்கள் கால அவகாசத்துடன் திருப்பி அனுப்பப்பட்டனர்.. 

No automatic alt text available.

ஒரு சிலர் அம்மருத்துவக்குழு மூன்று பேர் கையெழுத்து இட்ட சான்றும் கொண்டு வந்திருந்தனர் ஆனால் அதுவும் நிராகரிப்பு.  காரணம் அது TNPSC க்கான LETTER FORMAT ல் இல்லை என கூறினர். 

இவ்வாறு திருப்பி அனுப்பப்ட்டவர்கள் ஒவ்வொருவரும் மதுரை.. தேனி.. போன்ற தொலைவிலிருந்து வந்தவர்களும் கூட.. அதனால் இனி எந்த மாற்றுத்திறனாளி நண்பர்களும் அலைச்சல் இல்லாமல் ஒரே தடவையில் சென்று நல்லபடியாக TNPSC சென்று வர கீழ்கண்ட சரியான மருத்துவ விவரங்களை பதிவிடுகிறேன்..

1. உங்களது ஊனத்தின் விழுக்காடு அதில் எழுதி இருக்க வேண்டும்.
2. எந்த தேர்விற்கு தகுதியானீர்களோ அந்த வேலைக்கு இவரது ஊனம் எந்த விதத்திலும் தடையாக இருக்காது என தெளிவாக மருத்துவரால் எழுதி இருக்க வேண்டும்.
அதாவது GROUP 4 என்றால் GROUP 4 பதவிக்கு என எழுதியிருக்க வேண்டும்.
3. கீழ்கண்ட மருத்துவ மாதிரி சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கடித FORMAT ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இதில் தான் எல்லாமே வர வேண்டும்.

Image may contain: text
-------------------
Image may contain: text

4. மெடிக்கல் போர்டிடம் வாங்கும் சான்றிதழில் நீங்கள் எந்த வேலைக்காக வாங்குகிறீர்கள் என்பதனை குறிப்பிட்டு வாங்க வேண்டும். (எடுத்துக்காட்டு: இளநிலை உதவியாளர் (Junior Asst), தட்டச்சர் (Typist) இது போல்).

5. உங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் சேர்த்து காண்பிக்க வேண்டும்.
6. உங்களது மாற்றுத்திறனாளி புகைப்படம் ஒட்ட இடமிருந்தால் ஒட்டுங்கள்..இல்லையெனினுப் பரவாயில்லை.. காண்க.. படங்களை.
7.google ல் தேடுங்கள் இந்த FARMAT வரும் அல்லது அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் கிடைக்கும்.

#உங்களுக்கு இந்த பதிவு தேவையில்லை என்றாலும் தயவு  செய்து  பகிருங்கள்  லைக்ஸ்  வேண்டாம்  தமிழ்நாட்டின்  ஏதாவது ஒரு மூலையிலிருக்ககும்  ஒரு  மாற்றுத்திறனாளிக்கு உதவும் அவரது  வீண் அலைச்சலைத் தடுக்கும் நன்றி.


1 comment:

  1. எல்லா புகழும் திரு.அஜி அவர்களுக்கே.. உங்களைப் பார்த்து தான் நான் கற்றுக்கொண்டேன்.. நன்றி

    ReplyDelete