Sunday, 2 April 2017

TNPSC க்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

Standard
TNPSC க்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

'TNPSC க்கு ஒரு பணிவான வேண்டுகோள்:
---------------------------------------------------------

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் (TET & TRB) ஒவ்வொரு Main OMR சீட்டின் கீழ் ஒரு கார்பன் பேப்பர் மற்றும் அதன் அடியில் Duplicate OMR Sheet ஒன்று இருக்கும். தேர்வு முடிந்த பின்னர் தேர்வர்கள்  OMR சீட்டின் ஒரிஜினல் பிரதியை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும். Duplicate காப்பியை அவர்களுடன் எடுத்து செல்லலாம்

இதே போன்று TNPSC நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் போட்டியாளர்களுக்கான விடைப் பிரதியை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும். TNPSC தேர்வு விதியின் படி, தேர்வர்கள் தங்களின் வினாத்தாளில் அதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள வெற்றிடம் தவிர (Page for Rough Work)  வேறு எந்த இடத்திலும் குறிப்புகளையோ, அடையாளங்களையோ இடக் கூடாது. இந் நிலையில் தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளுக்கான விடைகளையும் அவர்களால் மனப்பாடம் செய்து கொண்டு, பின்னாட்களில் தேர்வு ஆணையம் மூலம் வெளியிடப்படும் விடைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது என்பது கடிமான காரியம். சிலவற்றை தவாறாகக்  கணக்கிடவும் வாய்ப்பு உண்டு. 

இவ்வாறு OMR சீட்டின் கார்பன் பிரதியை அவர்களுக்கு அளிப்பதின் மூலம், தேர்வர்கள் தங்கள் அளித்துள்ள விடையைத்  துல்லியமாக தெரிந்து கொள்வதுடன், தேர்வில் செய்துள்ள பிழைகளையும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். 

இதற்கு உண்டான சாதகங்களை ஆணையம் நன்கு ஆராய்ந்து ஆவண செய்யும் பட்சத்தில் ஆணையத்தின் மீதான நம்பிக்கை போட்டியாளர்களுக்கு அதிகரிக்கும். வெளிப்படைத் தன்மையும் மேலும் போற்றப்படும். 

ஆவன செய்யுமா TNPSC?

படத்தில் இருப்பது இன்று நடந்த TRB தேர்வில் பங்கு பெற்ற தேர்வர் ஒருவரின் OMR பிரதி.'

நன்றி 

அன்புள்ள
அஜி
சென்னை  

0 comments:

Post a Comment