Wednesday, 24 May 2017

1 முதல் 12ம் வகுப்பு வரை எந்தெந்த ஆண்டு முதல் பாடம் மாறுகிறது?

Standard


1 முதல் 12ம் வகுப்பு வரை எந்தெந்த ஆண்டு முதல் பாடம் மாறுகிறது?

கடந்த 7 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ஒன்றாம் வகுப்பு முதல் 1‌0 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டமும், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ‌11, 12 ஆம் வகுப்பு பாடத்திட்டமும் எந்தெந்த ஆண்டு முதல் மாற்றப்படும் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

2018-19 கல்வியாண்டு முதல் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது.

2019-20 ஆம் கல்வியாண்டு முதல் 2, 7, 10, ‌12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்‌டம் மாற்றப்படும்.

‌2020-21ஆம் கல்வியாண்டில் 3, ‌4,‌ 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும்.

பாடத்திட்டங்கள் சி.பி.எஸ்.இ உள்ளிட்ட இதர கல்வி வாரிய பாடத்திட்டங்களுக்கு மேலானதாக உருவாக்கப்படும்.

பாடத்திட்ட மாற்‌றம் அண்ணா பல்கலைக்கழக, வேளாண் பல்கலைக்கழக, தொழில்சார் பல்கலைக்கழகங்‌களோடு இணைந்து மேற்கொள்ளப்படும்.

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடத்தோடு தகவல் தொழில்நுட்பவியலும், கணினிப் பாடமும் சேர்க்கப்படும்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டமும் 20‌20-21‌ ஆம் கல்வியாண்டிற்குள் படிப்படையாக மாற்றப்படும்.

மனன முறையை தவிர்க்கும் விதமாகவும், மன அழுத்ததை ஏற்படுத்தாத வகையிலும், தமிழக தொன்மை, வரலாறு சார்ந்த அறிவோடு நவீனங்களை கையாளும் வகையிலும், ஏட்‌டறிவாய்க் குறைத்து மதிப்பிடாத வகையிலும் புதிய பாடத்திட்டம் இருக்கும்.

புதிய கற்றல், கற்பித்தல் முறைகளுக்கான கையேடு வழங்‌கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC தேர்விற்கு என்று தனியாக பாடத் திட்டம் கொடுப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான கேள்விகள் சமச்சீர் புத்தகத்தில் இருந்து வருகின்றன என்பதே உண்மை.

உதாரணமாக, அணி இலக்கணம் தமிழ் மொழிக்குரிய பாடத் திட்டத்தில் இல்லை. ஆனால் TNPSC தேர்வில் அது சம்பந்தமான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது .

இனி புதிய பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் வருமா அல்லது எவ்வாறு வரும்? என்பவை போக போகத்தான் தெரியும்.

நன்றி.

அன்புள்ள
அஜி
சென்னை.

4 comments:

  1. aji sir will it change the tnpsc syllabus...because in 2013 tnpsc changed syllabus because of samacheer kalvi

    ReplyDelete