Thursday, 6 July 2017

A STORY OF TNPSC WINNER

Standard


சகோதரர் நாகலிங்கம் (Asimo Naga ) என்னிடம் பகிர்ந்து கொண்டது:
------------------------------------------------------------------------------------------------------
No automatic alt text available.

** 12th முடிசுட்டு B.Tech Printing Technology படிக்கனும்னு ஆசை.
** வறுமை, அதனால B.Sc 2012 பச்சையப்பன் கல்லூரி ல முடிச்சேன்.
** நான் எழுதன முதல் போட்டி தேர்வு 27-11-2011 IBPS, TNPSC னு வரும்போது 7-7-2012 Gr4. நானே நோட்ஸ் எடுத்து படிச்சேன்.
** முதல ரயில்வே தான் முயற்சி பண்ணேன் முடியல. அப்பறம் பேங்க் அதுவும் முடியல. Etc..
** கடைசியாக TNPSC க்கு வந்தேன். நான் நோட்ஸ் எடுத்துட்டு படிச்சுட்டே இருக்கப்ப, திடில்னு 2013ல Tnpsc syllabus ah மாத்திட்டாங்க.
** பயந்து போய் கோச்சிங் சென்டர்ல சேர்ந்தேன். தேர்வுல அவங்க கொடுத்தது எதுவும் வரல. ரொம்ப மனவருத்தம்.
** எத எப்படி படிக்கனம்னு சொல்ல சரியான வழிகாட்டி இல்ல. 2015 பிப்ரவரி மாசம் கோவில உக்காந்து படிக்கும் போது ஒரு பள்ளி மாணவன் பாட புத்தகத்த காமிச்சி என்கிட்ட சந்தேகம் கேட்டான்.
** அவன் கேட்ட கேள்வி Tnpsc தேர்வுல ஏற்கனவே கேட்கப்பட்டது. அன்று தான் எனக்கு Text book படிக்கனும்னு ஞானம் வந்தது.
** இதற்கு அப்பறம் விடக்கூடாதுனு ராபகல் பாராது படித்தேன். VAO 2016 ல bike accident ஆயிடிச்சி. எல்லாரும் படிக்காத ஒய்வு எடுனு சொன்னாங்க. ஆனால் என்னால முடியல.
** வலிச்சாலும் பரவாலனு படிச்சேன்.165 போட்டேன் 5 Qn ல வேல miss ஆகிடிச்சி. நேரம் - காலம் தெரியாமல் படிச்ச காரணத்தினால் உடல் நலம் வேறு குன்றியது.
** Gr4 2016 Nov 6 தேர்வு அறையில அதிக உடல்வெப்பநிலை காரணமா, இரத்த வாந்தி எடுத்தேன். இருந்தாலும் இறைவன் அருளாள தேர்வ முழுமையா முடிச்சுட்டேன்.
JA typist
OA 823 43
Com 427 34
** Result பாத்ததும் கண்ணுல தண்ணீ வந்திடிச்சி. நிறையபேர் கிண்டல் பண்ணாங்க. ஆமா பெரிய collector வேல கண்ணுல தண்ணீ வந்திடிச்சாம்னு.
** Not 1ly TNPSC. 52 competative XM attend பண்ணி இருக்கேன் From 2011. எத்தனையோ ஏமாற்றங்கள் தோல்விகள் வலிகள பாத்துட்டேன்.
** வெளிய சொன்னா வெக்க கேடுதான் Typewriting கூட 3rd and 4th attempt ல தான் முடிச்சேன்.
** நா எல்லார்கிட்டேயும் சொல்றது ஒன்னே ஓன்னுதான்.
** முயற்சி!
தொடர்ச்சியான முயற்சி!
விடா முயற்சி!
நன்றிகளுடன்
பா.நாகலிங்கம் (Asimo Naga in FB)
காஞ்சிபுரம்

1 comment: