Monday, 31 July 2017

விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி - என் சகோதரியின் வெற்றிக் கதை

Standard
No automatic alt text available.

WELL DONE K. மகேஸ்வரி ✌️✌️👏👏👏👏😍😍😍😍😘😘😘😘

காலை வணக்கம்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அஜி அண்ணா! நான் TNPSC- க்கு படிச்சுக்கிட்டு இருக்கேன், பாஸ் பண்ண முடியுமா? அதிலும் நான், பாஸ் பண்ணிடுவேனா? என்ற கேள்வியுடன் முகநூலில் எனக்கு அறிமுகம் ஆனவர்தான் அன்புத் தங்கை மகேஸ்வரி. திருமண வயதை எட்டியும் படித்துக் கொண்டிருக்கிறார் என்று ஏளனம் செய்யும் அறியாத கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், என் பொண்ணு எல்லாம் ஜெராக்ஸ் கடையில சம்பாதிக்கிறாள், நீ வீட்டு ல இருந்து படிச்சு கஷ்டப்படுறத விட, இது போல் வேலைக்குச் செல்லலாமே என்று கூறும் பக்கத்துக்கு வீட்டு காரர், போன்ற விபரங்களை என்னிடம் ஆரம்பத்தில் பகிர்ந்து உள்ளார். வீட்டின் மூத்த பெண், பின்னர் இரண்டு தங்கைகள் , ஒரு தம்பி. நான் அவரிடம் கூறியது ஒன்றே ஒன்றுதான், நீ தேர்ந்து எடுத்து இருக்கும் பாதை மிகச் சரியானது. நீதான் உன் வீட்டின் ரயில் என்ஜின். பின்னல் வரும் தம்பி, தங்கைகள் எல்லாம் உன்னை தொடர்ந்து வரும் கரேஜ் மாதிரி. நீதான் அவர்களையும் சேர்த்து இழுத்துச் செல்ல வேண்டும். உனது வெற்றியே அவர்களுக்கும், தூண்டு கோலாக, முன்னேறிட உதவும் என்பதை மட்டும் மனதில் வைத்துப் படி என்றது தான். நம்மில் ஒருவராக இருந்து, என் கண் முன்னே படித்து, குரூப் -04 தேர்ச்சி பெற்று, போன வாரம் கலந்தாய்வில் கருவூல துறையை தேர்ந்து எடுத்து அரசு ஊழியராக இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக மிகக் கடுமையான உழைப்பாளி. அவரது உழைப்பின் மூலம் அவர் அடைய இருக்கும் உயரங்கள் இன்னும் பல. குரூப் 04 தேர்வு முடிவு வந்த சமயம் என்னிடம் 185 சரியான விடை அளித்து இருப்பதை கூறி நன்றாக திட்டு வாங்கினார். ஏன் என்றால், இவர் 192 சரியான விடை வரை தாராளமாக எடுக்கும் தகுதி படைத்தவர். இடையில் குரூப் 02 முதன்மைத் தெரிவிற்கு சென்றதால் இந்த பாதிப்பு. ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு, எந்த பயிற்சி நிலையத்திற்கும் செல்லாமல், ஆர்வம் மற்றும் உழைப்பின் மூலம் மட்டுமே இந்த வெற்றி அவருக்கு சாத்தியம் ஆகி இருக்கிறது. இனி அவரே தொடர்கிறார். ----------- நான் வசிக்கும் கிராமத்தில், இரண்டே வீடு. தீவு போல, குடும்பமே விவசாயம் மட்டுமே பிரதான தொழில். எது வாங்க கடைக்கு போனும்னாலும் 7 கி.மீ போனும். பேருந்து வசதி,குடினீர் வசதி இப்படி எதும் கிடையாது. தனியாக போக முடியாது. அப்பா கூட மட்டுமே இத்தனை வருட பயணம். அப்பா, அம்மா, நான், தங்கை இருவர், தம்பி,தாத்தா, பாட்டி என் குடும்பத்தின் முதல் பட்டதாரி நானே. அப்பா, அம்மா 10 ஆம் வகுப்பு படித்தவர்கள்,பண வசதியும் பெரிதாக இல்லை. சிறு வயது முதலே குடும்ப கஷ்டத்தை அனுபவித்தேன். வீட்டு வேலை, தோட்டத்தில் தண்ணீர் கட்டுதல், உரமிடுதல், செடி நடுதல், விதை ஊன்றல், இப்படியெல்லாம் ஆரம்பமானது 10 வயது முதல் 17 வயது வரை. நான் படிப்பேன் என்று என் வீட்டில் யாருக்கும் தெரியாது, என் ஆர்வமும் தெரியாது. எப்பொழுதும், வீடு,வேலை, ஆடு, மாடு என்றே இருப்பார்கள். என் தங்கையுடன் பள்ளிக்கு, 3-7 ஆம் வகுப்பு வரை 7 கி.மீ செருப்பு கூட இல்லாமல் நடந்தே சென்றேன். 8 ம் வகுப்பில் தாத்தா சைக்கிள் வாங்கி குடுத்தார், பிறகு 10 வரை சைக்கிளில். 10 வகுப்பில் நான் பாஸ் பன்னுவேம் என்று கூட என் வீட்டில் நம்பிக்கையில்லை. அப்பா, என்னை பதினொன்றாம் வகுப்பு படிக்க வைக்க மாட்டேன் என்றார். இதை பத்தாம் வகுப்பிலேயே கூறிவிட்டார்,நான் கெஞ்சினேன், பதினொன்றாம் வகுப்பு வேண்டும் என்று. அப்பா அதுக்கு முதல்ல பத்தாவது பாஸ் பன்னு பாப்போம்னு சொன்னார். 2005 இல் அரசு பள்ளியில் என் மதிப்பெண் 376/500, வீட்டில் யாருமே நம்பவில்லை. அப்ரம் நல்ல மார்க், டியூசன்லாம் போகாமனு சந்தோசபட்டாங்க! பதினொன்றாம் வகுப்பு வெற்றிகரமாக அரசுப் பள்ளியில் சேர்ந்து சைக்கிளில் பயணத்தை தொடர்ந்தேன். அப்போது ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போது குடிகாரன் ஒருவன் கலாட்டா செய்தான். பயம் சூழ்ந்தது. பள்ளி செல்லவோ, வெளியில் சொல்லவோ பயம். சுற்றத்தார் அனைவரும் பள்ளி செல்ல வேணாம், நமக்கு பிள்ளைதான் முக்கியம் என்றார்கள். அன்றிலிருந்து அப்பா பைக்கில் கூட்டிச் செல்வார். இப்படி 12 ஆம் வகுப்பு முடிந்தது, அதில் 805/1200 மதிப்பெண். பின்னர் கல்லூரி படிப்பு என்பது எட்டாக் கனியானது. பெண்ணுக்கு கல்லூரி படிப்பு எதற்கு திருமணம் செய் என்றார்கள். அதிலும்,தாத்தா, சித்தப்பா(குடும்பத்தின் முஸ்லீம் நண்பர், இப்படித்தான் கூப்பிடுவேன் ), இவர்களின் பண உதவி & ஊக்குவித்தலால் கல்லூரி விண்ணப்பித்தேன். எங்க போறது?, என்ன பன்னனும்?, யார் பாக்கனும்?, எப்படி எழுதனும் ஒன்னும் தெரியாது?. அட்டஸ்டேடு அப்டினு சொன்னதுலாம் அப்போ எனக்கு தெரியாது. முதல் முறை புதுக்கோட்டை(முதல் பேருந்து பயணம்). அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை கணிதம் ஆங்கில வழியில் கிடைத்தது. கல்லூரி சென்றால், காதல் செய்து குடும்பத்திற்கு கலங்கம் வரும் என்ற கற்பனையில் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை. எப்படியோ கல்லூரி சேர்ந்தாச்சு. கல்லூரி நேரம் மதியம் 12.50-5.20. கல்லூரியில் இருந்து என் வீட்டிற்கு பயணம் 2 மணி நேரம். இரவு 8 மணி வரை காத்திருந்து அப்பா வீட்டிற்கு கூட்டிச் செல்வார். பெட்ரோல் போடுவதற்கு கூட வழியில்லை. 2007-2010 கல்லூரி படிப்பு அரியர் இன்றி 70% தரத்தில் தேர்ச்சி. பின் என்ன செய்வது தெரியவில்லை, அப்போது எனக்கு தெரிந்த ஒரே பணி ஆசிரியர் பணி. எனவே ஆசிரியர் பணிக்கு பி.எட் வேண்டும் என்றார்கள். பி.எட் அரசு கல்லூரியில் படிக்க என் 70% போதாது எனவே தனியாருக்கு செல்ல வேண்டும்.
பணம் மொத்தமாக 48000 கட்ட வேண்டும் என்றார்கள், அப்போது எல்லாம் நான் 1000 ரூபாய் லாம் பாத்ததே இல்லை. அந்த நேரத்திலும் என் தாத்தா ஆசை ஆசையாக வளர்த்த மாட்டை ரூ.25000 க்கு விற்றார். ரூ.25000 இல் அட்மிசன் போட்டாச்சு! அடுத்த ஒரு மாதத்தில் மீதமுள்ள 23000 ஐ கட்ட வேண்டும், யுனிபார்க்கு 2 ஆயிரம் தனியாக, அந்த சித்தப்பாதான், மேற்க் கொண்டு உதவி செய்தார்.. சித்தப்பா,சித்தி என்றே ஒரே கும்பமாக பழகி விட்டோம். அவர்கள் மூலம் மீதமுள்ள 25000 கட்டியாச்சி. ஆனால் இன்று வரை அவர் செய்யும் உதவிக்கு அளவே இல்லை.அந்த ஆண்டின் தேர்ச்சி 2010-11 இல் 79.6%. தமிழ் & உளவியலில் கல்லூரியில் முதல் மதிப்பெண், பின் முதுகலை கணிதம் படிக்க ஆசை. வீட்டில் விருப்பத்துடன் தனியார் கல்லூரியில் சேர்ந்தேன். பி.எட் & எம்.எஸ்.ஸில் கல்லூரி பேருந்து. இறங்கி வழக்கம் போல் வீட்டிற்கு அப்பாவுடன் பைக்கில் பயணம், 2011-2013 இல் தேர்ச்சி 69%.
அதே ஆண்டில் முதுகலை இரண்டாம் ஆண்டின் இறுதியில் டெட் தேர்வு அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் ஆக இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்றார்கள். மனதில் உறுதி கொண்டேன், இதுவரை படித்தது படிப்பு இல்லை, இனிமேல் எடுப்பது எதிர்கால வாழ்க்கையின் சபதம் என்று. பள்ளிப்பாட புத்தகத்தை சேகரித்தேன், பிற ஊர் பிள்ளைகளிடம் தினமும் கல்லூரி பேரிந்தில் 1.30+1.30 மணி நேரம் படிப்பதற்கு பள்ளிப் புத்தகம் எடுத்துச் செல்வேன். பேருந்தில் அனைவரும் புதிராக பார்ப்பார்கள். கல்லூரியின் ஆசிரியர் வராத பாடப்பிரிவுகளிலும் படிப்பேன். முதுகலை முடிந்து கல்லூரி படிப்பும் முடிந்தது, இரண்டு மாதத்தில் ஆகஸ்ட் 18 ,2013 இல் டெட் தேர்வு எழுதினேன். 82 எடுத்தால் டெட் தேர்ச்சி என்ற நிலையில் 88/150 மதிப்பெண் பெற்றேன். முதல் அரசுத் தேர்வு வெற்றி. சான்றிதல் சரிபார்ப்பு முடிந்து தகுதிச் சான்றிதல் கிடைத்தது. வெயிட்டேஜ் சார்பான வழக்கால் வேலை இல்லை. ஆனாலும் சான்றிதல் பெற்ற நாளிலிருந்து 7 வருடம் செல்லும் என்றார்கள். தற்போது 3 வருடம் முடிந்தது, 2013 இல் நடைபெற்ற ஆகஸ்ட் 25 தேர்வுதான் என் முதல் டி.என்.பி.எஸ்.சி.தேர்வு குரூப் 4. ஹா! ஹா! வழிகாட்டுதலே இல்லை. டி.என்.பி.எஸ்.சி விரிவாக்கம் கூட தெரியாமல் முதல் குரூப் 4 தேர்வு, 130/200 வினா சரி. டெட் தேர்வுக்கு படித்த கணிதம், தமிழ் மட்டுமே தெரிந்தது. டி.என்.பி.எஸ்.சி எனக்கு விருப்பமே இல்லை. எனவே அடித்து வரும் தேர்வு எல்லாம் சும்மாவே எழுதி வந்தேன். தமிழ்,கணிதம் வைத்து, ஏன் என்றால் எனக்கு ஆர்ட்ஸ் பாடம் வராது. பின்னர் வரலாற்றை மட்டும் படித்து எழுதிய இரண்டாவது குரூப் 4 இல் 150/200 வினா சரி. அப்போதுதான் முடிவு பன்னேன், நம்ம ஏன் டி.என்.பி.எஸ்.சி படிக்க கூடாதுனு? டெட் வரும் போது பாத்துக்கலாம்னு. தமிழ், கணக்கு, வரலாறு வச்சு 150 வினா போடும் நாம் எல்லா பாடமும் படித்தால் எங்கயோ போவோம்னு தோணுச்சு. ஓரளவு படித்து குரூப் 2 எழுதினேன், முதல் நிலையில் தேர்ச்சி என ரிசல்ட். ரொம்ப சந்தோசம் இண்டர்வியூ போஸ்ட்ல பாஸ்னு, இதான் என் டி.என்.பி.எஸ்.சி முதல் வெற்றி. பின்னர், குரூப் 2 மெயின் தேர்வு எழுதியுள்ளேன், சரியாக எழுத வில்லை. ஏன்னா முதல் எழுத்து தேர்வு, அனுபவம் இல்லை. இறுதியாக இந்த குரூப் 4 இல் (Nov 06, 2016) அனைத்து பாடத்தையும் சிலபஸ் வைத்து படித்தேன். வரி வரியாக, முதல்முதலாக நடப்பு வினா என்ற ஒரு பகுதியை குரூப் 4 இல் தான் படித்தேன். தினமும், தி இந்து, தினமணி, தினதந்தி என பேப்பர் அப்பாவை வாங்கி வரச் செய்து நோட்ஸ் எடுப்பேன். வீடே இல்லை. பிறகு இங்கு எப்படி பேப்பர் வரும்? டெய்லி படித்து விட்டு மனதில் அசை போடுவேன், பின்னர் முகநூல் பழக்கம் தெரிந்து கொண்டேன். முகநூலில், வெட்டியாக சாட் செய்வதற்கு பதில, முகநூல் குழுக்களில் வினா பதிவிட்டால் சிறப்பு என நினைப்பேன். வினா பதிவிடாத நேரத்தில் பிறரின் வினாக்களுக்கு விடை அளிப்பேன். முக நூலில் பலருக்கு என்னைப் பிடிக்காது. ஹாய் போட்டால் பதில் அளிக்க மாட்டேன். பலர் படிச்சு மெண்டல் ஆகிடாதனு சொல்வாங்க. ஜாலியா பேசு, பிரீயா இரு, எந்ஜாய் பன்னுனு. படிப்பு பத்தி மட்டும்தான் பேசுவயானு. எனக்கு ஜாலியா பேச தெரியாது. இதனால் இதனால் எனது முக நூல் கணக்கை பிறர் பிளாக் லாம் செஞ்சுருக்காங்க. படம், பாட்டு, திரையரங்கு, சுற்றுதல் இப்படி எதும் இல்லை, பிறகு எப்படி நான் ஜாலியா இருப்பேன். ஜோக் சொன்னா கூட புரியாது. என்ன எல்லாம் ஓட்டுவாங்க. நடிக்குறேன் நல்ல புள்ள மாறினு.
ஆனால் எனக்கு உண்மையாவே தெரியாது. என்ன வித்தியாசமா பாக்குறாங்க. எனக்கு பல பிரச்சனை, தடைகளை தாண்டி **ஒரு நாளும் முகம் சுளிக்காத அம்மா, **பலரின் ஏளன பேச்சுக்கு இடையே என்னை இன்று வரை பைக்கில் சுமக்கும் என் அப்பா, **அந்த கால தாத்தாவாக இருந்தாலும் என் படிப்பை முதன்மையாக கருதி ஊக்கப்படுத்திய தாத்தா, **மத பேதமின்றி உதவிய சித்தப்பா,.. இவங்கதானே எனக்கு கடவுள். நான் இதுவரை கோவிலுக்குலாம் சென்றதில்லை, கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பாவுக்கு படிப்புனா உயிர், டெய்லி என்னிடம் படிப்பு பற்றி டிஸ்கஸ் பண்ணுவாங்க. ஏனென்றால், என் அப்பாவிற்கும், எனக்கும் அரசு வேலையின் மீது மோகம் அதிகம். அரசுப் பணி எதுனாலும் கெத்து. வேலை வாங்காமல் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று பிடிவாதம், அதற்கு என் அப்பா 100% சப்போர்ட். இப்பொழுது சென்ற வாரம் நடந்த கலந்தாய்வில், கருவூல துறையை தேர்ந்து எடுத்து உள்ளேன். இப்போது என் மீது, சுற்றியுள்ள ஊரிலும் நல்ல மரியாதை - பேர் மற்றும் புகழ் வேறு. இவங்க பொண்ணுனு அப்பா,அம்மாவுக்கு நல்ல பேரு. என்னால எங்க குடும்பத்திற்கு சந்தோசம் பெருமையா நிம்மதியா இருக்கு. இப்பொழுது மற்றவர்களுக்கும், பெற்றவர்களுக்கும் என் மீது முழு நம்பிக்கை, அவளால முடியும்னு. என்ன பொறுத்த வரை "வராது" என்ற பாடமே இல்லை, நாம முயற்சி செய்யாமல் இப்படி கூறுகிறோம். வராததுனு எதும் இல்லை, முயன்றால் எதுவும் சாத்தியம். அனைத்து பாடமும் தெளிவாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். எனக்கு முகனூலில் பல நண்பர்கள் தற்போது உதவியாக இருக்கிறார்கள், ஆலோசனையும் கிடைக்கிறது. அதற்கு என் படிப்புதான், நல்ல நட்புக்களை தேடித் தந்துள்ளது. இவ்ளோ கஷ்டத்தை அனுபவித்து நான் இந்த வெற்றியை அடைந்துள்ளேன். அதனால் வெற்றியை எல்லாம் பெரிதாகக் கொண்டாட வில்லை. எல்லோர் கஷ்டமும் என்னால் உணர முடியும், என்னை உணர முடியவில்லை யாருக்கும். அண்ணா! என் வாழ்க்கையில் நான் உணர்ந்த ஒன்று.. இன்பத்தில் பங்குக் கொள்ள நினைக்கும் பலர்.. துன்பத்தை செவிமடுக்க கூட விரும்புவதில்லை..

0 comments:

Post a Comment