Monday, 7 August 2017

வணக்கம் நண்பர்களே,

Standard
வணக்கம் நண்பர்களே,
ஒன்றே ஒன்று மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
படித்தோம், தேர்வு எழுதினோம். அத்துடன் இந்த Gr 02A, தேர்வினை மறந்து விட்டு, உங்கள் அடுத்த இலக்கிற்கான பயணத்தைத் தொடருங்கள்.
TNPSC OFFICIAL ANSWER KEY வரும் புதன்கிழமை வரலாம். அதில் உங்கள் மதிப்பெண்கள் எவ்வளவு என்று மட்டும் தெரிந்து கொண்டு, அடுத்த தேர்வினை நோக்கி பயனப் படுங்கள்.
இது தேர்வின் மூலம், நாம் இன்னும் படிக்க வேண்டியது என்ன? கற்க வேண்டியது என்ன? பல வருடங்கள் படித்தும், இன்னும் எதில் நாம் இன்னும் பலவீனமாக இருக்கிறோம்?, என்ற சுய பரிசோதனை மட்டும் செய்யுங்கள். அது தான் உங்களுக்கு உதவும்.
அதை விட்டு விட்டு, இந்த தேர்வு கடினமா?, எளிதா? அல்லது நமக்கு மட்டும்தான் கடினமா?, கட்-ஆப் எவ்வளவு? போன்ற விவாதங்கள் எந்த வகையிலும் நன்மையைத் தராது.
நீங்கள் முக நூலிலோ அல்லது நேரிலோ எத்தனை பேரிடம் கேட்டாலும் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.
அதற்க்கு முன்பு TNPSC ல் இருந்து ஒவ்வொரு படி நிலையிலும் உங்களுக்கு கடிதம் வரும். அப்போது நமது நிலையைத் தெரிந்து கொள்ளலாம். வேலை கிடைத்தால் மகிழ்ச்சியாக சேரலாம்.
அதனை விட்டு விட்டு இது போன்ற வீண் விவாதங்கள் உங்கள் நேரத்தினை வீணடிப்பதோடு, உங்களுக்கு மன உளைச்சலைத்தான் கொடுக்கும்.
உங்களுக்கு கிடைத்து விடும் என்று நீங்கள் நம்பி படிக்காமல் விட்டு விட்டால், பின்பு கிடைக்க வில்லை என்றால் கடினம்.
உங்களுக்கு கிடைக்காது என்று எண்ணி, உங்கள் உற்சாகத்தை இழது விட்டால் பின்னர் அடுத்த தேர்வுக்கு படிப்பது கடினம்.
நடந்தவற்றை மறந்து விட்டு, நடக்க இருப்பதை கருத்தில் கொள்ளுங்கள். அது தான் புத்திசாலித்தனம்.
நீங்கள் தற்போது எந்த நிலையில் இருந்தாலும், கையில் ஆர்டர் வந்தால்தான் உறுதி.
இப்படிக்கு,
உங்களை போல் வீண் விவாதங்கள் பலவற்றில் பங்கேற்று பின்னர் புரிந்து கொண்ட,
அஜி,
சென்னை.

0 comments:

Post a Comment