Tuesday, 15 August 2017

இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாறு - படங்களுடன் சுருக்கமாக

Standard
1. ஆங்கில அரசில் குடிமை பணி அதிகாரியாக இருந்த ஆலன் ஆக்டாவியன் ஹியூம் அறிவுரையின் படி 1885 ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய பொழுது.


Image may contain: one or more people, people standing, crowd and outdoor

2. 1905, அக்டோபர் 16 ல் வங்காளத்தை இரண்டாக பிரித்த கர்சன் பிரபு. இவர் மேற்கு வங்காளம் மற்றும் பீஹார் ஒரு பகுதியாகவும், கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மற்றொரு பகுதியாகவும் பிரித்தார். இந்த கிழக்கு வங்காளம் தான் பின்னாளில், அதாவது 1971 ல்ல பங்களாதேஷ் என்ற தனி நாடக உருவானது.

Image may contain: 1 person

3. 1906, டிசம்பர் 30 ல் காங்கிரஸின் போக்கு முஸ்லிம்களுக்கு எதிரானதாக உள்ளது என்று கூறி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் முஸ்லீம் லீக் கட்சியைத் தொடங்கிய நவாப் சலீமுல்லா கான்.

Image may contain: 1 person, closeup

4. 1916 ல் லக்னோவில் நடை பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முஸ்லீம் லீக்கும், திலகர் தலைமையிலான தீவிரவாத குழுவும் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தன. இப்படத்தில் காந்தியுடன் இருப்பவர், முகமத் அலி ஜின்னா.
Image may contain: 2 people, sunglasses

5. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான சதி வேலைகளை முறியடிக்க 1917, மார்ச் 26 அன்று, ரௌலட் சட்டத்தை கொண்டு வந்த சர் சிட்னி ரௌலட் இவர்தான். இது இந்தியர்களை கடுமையாக ஒடுக்குவதற்காக இருந்தது. இதனை காந்தி "சாத்தன் சட்டம்" என்று வர்ணித்தார், இதற்க்கு கருப்பு சட்டம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

Image may contain: 1 person

6. ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், 1919, ஏப்ரல் 13 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் "ஜாலியன் வாலாபாக்" என்ற பூங்காவில் நடை பெற்ற போராட்டத்தில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டனர். அங்கு ஜெனரல் டயர் தலைமையில் வந்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 379 கொல்லப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 1137 பேர் காயம் அடைந்தனர்.

Image may contain: one or more people

7. "ஜாலியன் வாலாபாக்" துப்பாக்கி சூடு.


Image may contain: one or more people and outdoor

8. இன்றைய ஜாலியன் வாலாபாக்.

Image may contain: sky and outdoor

9. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான ஜெனரல் டயர் இவர்தான். துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்தவர் ஹென்றி.ஓ.டயர். இந்த துப்பாக்கி சூட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக ஜெனரல் டயருக்கு 20,000 ருபாய் ரொக்க பரிசு மற்றும் வீர வாள் ஆங்கில அரசால் வழங்கி கௌவிரக்க பட்டது.

Image may contain: 1 person, closeup

10. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூட்டினை தொடர்ந்து 1920 ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். இது 1921 ல் முழு வீச்சில் நடை பெற்றது. ஒழுத்துழையாமை இயக்கம் என்பது ஒரு அரசியல்-பொருளாதார இயக்கம். அந்நிய ஆடைகள், பொருட்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசுவேலை, தேர்தல் முதலானவற்றை புறக்கணிப்பது இதன் நோக்கம். இதில் பரவலாக மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Image may contain: 1 person, outdoor

12. ஒழுத்துழையாமை இயக்கத்தின் படி, அந்நிய ஆடைகளை புறக்கணித்து, தானே தனது ராட்டினத்தில் கதர் ஆடைகளை நூற்றுக்கொள்ளும் காந்தி.

Image may contain: one or more people

13. 1923, ஜனவரி 01 ல், காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கயாவில், மோதிலால் நேருவுடன் இணைந்து சுயராஜ்ய கட்சியை தொடங்கிய சி.ஆர்.தாஸ் இவர்தான்.

Image may contain: 1 person, sunglasses and closeup

14. 1930 ல், சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கிய காந்தி, அதன் ஒரு பிரிவாக தண்டி யாத்திரையை மேற்கொண்டபோது எடுத்த படம்.

Image may contain: one or more people and people standing

15. 1930 மார்ச் 12 முதல் ஏப்ரல் 05 வரை, மொத்தம் 24 நாட்கள் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரை மொத்தம் 400 கி.மீ நடந்து சென்றார். .
Image may contain: one or more people, people walking, people standing and outdoor

16. அப்போது காந்தியுடன் தண்டி யாத்திரை சென்றவர்களின் எண்ணிக்கை 79, அவர்களுள் முக்கியமானவர் சரோஜினி நாயுடு. (காந்தியுடன் படத்தில் இருப்பவர்)
Image may contain: 1 person, standing

17. தண்டியை அடைந்த காந்தி தந்தியில் உப்பு காய்ச்சும் காட்சி. இதன் விளைவாக காந்தி கைது செய்யப்பட்டு புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

Image may contain: one or more people

18. காந்தி வடக்கே தண்டி யாத்திரையை மேற்கொண்ட போது, தமிழகத்தில் அவரது முக்கிய சீடரான ராஜாஜி தலைமையில் வேதாரண்ய சத்தியாகிரகம் நடை பெற்றது. ராஜாஜி திருச்சியில் இருந்து வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சினார். அவருடன் சென்றவர்களின் எண்ணிக்கை 100. ராஜாஜியுடன் சென்றவர்களில் மிகவும் முக்கியமானவர் காமராஜர். காமராஜர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்க பட்டார்.

Image may contain: 3 people, outdoor

19. 1930 ல் நடைபெற்ற முதலாம் வட்ட மேசை மாநாடு. இது ஆளும் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று கருதி காந்தி கலந்து கொள்ள வில்லை.

Image may contain: one or more people

20. இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் காந்தியை கலந்து கொள்ள வைக்க ஆங்கில அரசு இர்வின் பிரபுவை அனுப்பியது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி காந்தி இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள சம்மதித்தார். ஆண்டு 1931.

Image may contain: one or more people, sunglasses and beard

21. 1931 ல் நடை பெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் காந்தி 23 நாட்கள் கழித்து கலந்து கொண்டார். அந்த புகைப்படம் தான் இது.

Image may contain: one or more people and people sitting

22. பின்தங்கிய மக்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்ற அம்பேத்கரின் 1930 முதலாம் வட்ட மேசை மாநாட்டில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்று ராம்சே மெக் டொனால்டு 71 தனி தொகுதிகள் அளித்தார். இதனை காந்தி எதிர்த்து, தனி தொகுதிகளுக்கு பதிலாக 148 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து காந்தி-அம்பேத்கர் இடையே 1932-ல் புனே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது, அம்பேத்கர் புனே ஒப்பந்தத்தில் கையெழுத்த்திட்ட போது எடுத்த படம்.

Image may contain: one or more people, people sitting and indoor

23. 1940 ல் லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் சலுகை, 1942 ல் ஏற்பட்ட கிரிப்ஸ் தூது குழுவுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் தோல்வி ஆகியவற்றை தொடர்ந்து, 1942 ஆகஸ்ட் 08 பம்பாயில் காந்தி "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை தொடங்கிய போது எடுத்த படம். இந்த போராட்டத்தின் போது தான், சுதந்திரம் வாங்கும் வரை நான் ஓய மாட்டேன், செய் அல்லது செத்து மடி என்று கூறினார்.

Image may contain: one or more people, people standing, crowd and outdoor

24. 1942 ல் ஆஸாத் ஹிந்து பவுஜ் எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கிய நேதாஜி, இளம் வயதில்.
Image may contain: 2 people, sunglasses and closeup
25. இந்திய தேசிய ராணுவத்தில், நேரு பிரிவு, காந்தி பிரிவு, நேதாஜி பிரிவு மற்றும் ராணி லட்சுமிபாய் பிரிவு என பல பிரிவுகள் இருந்தன. ராணி லட்சுமிபாய் பிரிவிற்கு தலைமை வகித்தவர் தமிழ் பெண் லட்சுமி.
Image may contain: one or more people and outdoor

26. நேதாஜி பிரிவிற்கு தலைமை வகித்தவர் நவாஸ் கான்.

Image may contain: one or more people and people standing

27. காந்தியுடன் நேதாஜி. நேதாஜி என்றால் தலைவர் என்பது பொருள்.

Image may contain: 1 person, sunglasses and beard

29. 1945 ல் பாங்காக்கில் இருந்து டோக்கியோ செல்லும் வழியில் தாய்லாந்தில் நேதாஜி மாயமானார். இது அவரது கடைசி படம் என்று கருதப்படுவது.
 Image may contain: one or more people and text

30. 1946 செப்டம்பர் 02 ல், இடைக்கால அரசிற்கு நேரு தலைமை வகித்த போது. இடைக்கால அரசிற்கு தலைமை தாங்க வருமாறு நேருவிற்கு அழைப்பு விடுத்தனர் வேவல் பிரபு. நேருவின் இடைக்கால அரசில் நிதி அமைச்சர் மொராஜி தேசாய், தொழில் துறை அமைச்சர் ராஜாஜி.

Image may contain: one or more people and wedding

31. பல்வேறு சோதனைகளுக்கு பின்பு 1947, ஆகஸ்ட் 15 ல் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்பட்ட போது.
Image may contain: one or more people

32. சுதந்திரம் பெற்ற பிறகு நடை பெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட காந்தி, நேரு, படேல்.


Image may contain: 9 people, people standing and wedding

33. சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சில் காந்தி மற்றும் நேரு.

Image may contain: 2 people, people smiling

34. மவுண்ட் பேட்டன் பிரபு மற்றும் அவரது மனைவியுடன் நேரு.

Image may contain: 3 people, people standing and shoes

35. 1948, ஜனவரி 30 ல் காந்தி கோட்ஸேவால் சுட பட்டு இறந்து கிடைக்கும் காட்சி.

Image may contain: one or more people

36. காந்தியின் இறுதி ஊர்வலம்.


Image may contain: outdoor

37. நேரு நடந்து செல்ல தில்லாக சாரட் வண்டியில் செல்லும் இந்தியாவின் இரும்பு மனிதர், இந்தியாவின் பிஸ்மார்க் சர்தார் வல்லபாய் படேல்.

நேருவுடன் நடந்து செல்லும் நபர் எல்லை காந்தி கான் அப்துல் கப்பார் கான்


Image may contain: 2 people, people standing and outdoor

38. 1906 ம் ஆண்டில் ரூபாய் 10 இலட்சம் தனது சொந்த பணத்தை செலவு செய்து, தூத்துக்குடி-கொழும்பு இடையே இலவோ, காலியா என்ற இரண்டு சுதேசி கப்பல்களை நாட்டிற்க்காக அர்ப்பணித்து ஆங்கிலேயே அடக்குமுறையை விளாசித் தள்ளிய வ.வு.சி. இதற்காக ஆங்கிலேயே அரசு இவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சிறையில் கையும், காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் செக்கிழுக்க பணிக்கப்பட்டார்.

Image may contain: 1 person

39. வ.வு.சி. கப்பல் வாங்க உதவிய அவரது நெருங்கிய நண்பர் சுப்ரமணிய சிவா. இவர் பாப்பர பட்டியில் பாரத மாதாவிற்கு ஆசிரமம் சிலையும் அமைத்தார். இவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சேலம் சிறையில் அடைத்தது. அங்கு தொழு நோயால் பாதிக்கப்பட்டார். இவரை பழி வாங்கவே தொழு நோயாளிகள் ரயிலில் செல்ல கூடாது என்ற ஒரு சட்டத்தினை ஆங்கிலேய அரசு விதித்து, இவரை விசாரணையின் போது நோயுடன் பல மைல்கல் நடத்தியே கூடி சென்றது. 

Image may contain: one or more people, people standing and beard
40. 
சென்னையில், புரட்சி இயக்கத்தை தொடங்கிய நீலகண்ட பிரம்மச்சாரியின் சீடர் படத்தில் இருக்கும் வாஞ்சி நாதன். பல அடக்கு முறைகளை கையாண்ட ஆஷ் துறையை 1911 ம் ஆண்டு திருநெல்வேலி அருகே உள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட இளம் பிராமண இந்திய வீரர் இந்த வாஞ்சி நாதன். இவரது சொந்த ஊர் செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம். இவரது தந்தை பெயர் ரகுபதி ஐயர்.
Image may contain: 1 person, closeup

41. வாஞ்சி நாதன் பயன் படுத்திய கை துப்பாக்கியின் பெயர் பிரவுனிங் கைத்துப்பாக்கி. இவருக்கு இந்த கை துப்பாக்கியை சுட பயிற்சி அளித்தவர்தான் படத்தில் இருக்கும் வா.வே.சு. ஐயர்.

Image may contain: 1 person, beard

42. இந்தியாவின் இரும்பு மனிதர் உயிரற்ற நிலையில்.

Image may contain: 2 people, closeup

43. ஆணை போல் போர்வேடம் தரித்து, மிக துணிச்சலாக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய ஜான்சி ராணி லட்சுமி பாய். இவரது வீரம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது என்று கூறியவர், இவரை 1858 ம் ஆண்டு போர்க்களத்தில் கொன்ற பிரிட்டிஷ் தளபதி ஹே ரோஸ்.

Image may contain: 1 person

44. நாட்டு மக்களுக்கு தேச பற்றை அளித்த முக்கிய பத்திரிக்கையான அமிர்த பஜார் பத்திரிகை.

Image may contain: one or more people

45. நாட்டு மக்களுக்கு தேச பற்றை அளித்த மற்றொரு முக்கிய பத்திரிக்கையான பம்பாய் சமாச்சார் பத்திரிக்கை அலுவலகத்தின் இன்றைய தோற்றம்.
Image may contain: outdoor 

46. 1907 ல் திலகரின் பேச்சினை தமிழில் மொழி பெயர்த்து அளித்து இருக்கும் பாரதி.

Image may contain: 1 person, text

47. 1876-1880 வரை மோசமாக ஆட்சி செய்து மக்களை பெரும் பஞ்சத்தில் தள்ளிய லிட்டன் பிரபு. 1878 ல் இவர் கொண்டு வந்த கேஜிங் திட்டம் எனப்படும் நாட்டு மொழி செய்தி தாள் திட்டம், ஆங்கிலேயர்க்கு எதிராக எந்த பத்திரிக்கையும் செய்திகளை வெளியிட கூடாது என்று மிரட்டியது.
Image may contain: 1 person, beard

48. ரிப்பன் தி குட் என்று அழைக்கப்பட்ட ரிப்பன் பிரபு. 1880-1884 ல் ஆட்சி செய்த இவர் இந்தியர்களின் பிரச்சினைகளை மிகவும் கனிவுடன் கையாண்டார். 1882 ல் தல சுயாட்சி என்ற மகத்தான திட்டத்தினை அறிமுகம் செய்து "உள் ஆட்சியின் தந்தை" என்று புகழ் பெற்றார். லிட்டனின் நாட்டு மொழி செய்தி தாள் திட்டத்தினை இவர் ரத்து செய்தார். 1883 ல் புகழ் வாய்ந்த இல்பர்ட் மசோதாவை கொண்டு வந்தார். இல்பர்ட் மசோதா என்பது, ஆங்கில குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரிக்கலாம் என்பதாகும். இதற்கு ஆங்கிலேயர் எதிர்ப்பு தெரிவிக்கவே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கிலாந்திற்கே திரும்ப சென்று விட்டார்.
Image may contain: 1 person, beard and text

49. சிறுவனாக காந்தி.


Image may contain: 1 person

50. தனது நாட்டு பற்று மிக்க பாடல்களின் மூலம் மக்களிடம் தேச பற்றினை கொழுந்து விட்டு எரிய செய்த பாரதி. இவரது அச்சமில்லை அச்சமில்லை, எந்தையும் தாயும், ஜெய பாரதம் போன்ற பாடல்களுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. திலகரை ஆதரித்த இவர் 1907 ல் சூரத் மாநாட்டில் கலந்து கொண்டார். இவரை ஆங்கில அரசு கைது செய்ய முற்படவே 1909 ல் பிரஞ்சு காரர்கள் வசம் இருந்த பாண்டிச்சேரி க்கு தப்பி ஓடினார். அங்கு இருந்து தனது பத்திரிக்கை மற்றும் கவிதைகளை வெளியிட்டார். பின்னர் மீண்டும் 1919 சென்னை வந்தார்.

Image may contain: 1 person, closeup and text

51. 1939 ல் முற்போக்கு கட்சியை தொடங்கிய நேதாஜியை மதுரைக்கு அழைத்து வந்து நேதாஜியையும், அவரது கொள்கைகளையும் தமிழக மக்களிடம் பரப்பிய முத்துராமலிங்கர். நடு வரிசையில் இடமிருந்து மூன்றாவதாக முத்துராமலிங்கர், அவரை அடுத்து மாலையுடன் நேதாஜி.

Image may contain: 7 people

52. 1928, அக்டோபர் 30 ல் சைமன் குழுவிற்கு எதிரான போராட்டத்தில் லாகூரில் பிரிட்டிஷாரால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து மரணம் அடைந்த லாலா லஜபதி ராய். இவரை தாங்கியவர் சாண்டர்ஸ். சிறிது நாள் கழித்து இந்த சாண்டர்ஸ், பகத்சிங்கால் சுட்டு கொல்லப்பட்டார்.

Image may contain: 1 person, hat and closeup

53. காந்தி மிக சாதாரமானவனாக இருந்த போதே அவருக்கு, அவரது போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தென் ஆப்பிரிக்காவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு 16 வயதில் தனது இன்னுயிரை நீத்த தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மை.
Image may contain: 1 person, closeup 

54. தகவல்கள், படங்கள் தரவிறக்கம் அஜி , நன்றி.

Image may contain: text

1 comment: