Saturday, 23 September 2017

ஒரு முறை நிரந்தரப் பதிவு (ONE TIME REGISTRATION) என்றால் என்ன?

Standard
ஒரு முறை நிரந்தரப் பதிவு: முதலில் நீங்கள் TNPSC-க்கு படித்துக்க கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் எந்த ஒரு தேர்வுக்கும் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. அதற்க்கு முன்னர் இந்த ஒரு முறை நிரந்தரப் பதிவு என்ற ONE TIME REGISTRATION பதிவு செய்ய வேண்டும். இதனைப் பதிவு செய்த பின்னர், உங்களுக்கு என்று ஒரு பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச் சொல் (PASSWORD) கொடுக்கப்படும். இதனைக் கொண்டு எந்த ஒரு தேர்விற்கும் விண்ணப்பம் செய்யும் பொழுது உள்ளீடு செய்ய வேண்டும். உங்கள் பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச் சொல்லை (PASSWORD) பத்திரமாக பாதுகாக்க வேண்டும், யாரிடமும் பகிரக் கூடாது. நீங்கள் யாரிடமும் பகிர்ந்து, பின்னர் உங்கள் விண்ணப்ப தகவல்களில் தேவை இல்லாத மாற்றம் ஏற்பட்டு விட்டால் அதற்க்கு எந்த வகையிலும் TNPSC பொறுப்பு ஆகாது. பாதிப்பு உங்களுக்கே. உங்களது பெயர், தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு, SSLC தகவல்கள் போன்ற முக்கியமான தகவல்கள் இந்த நிரந்தப் பதிவில் இருந்து உங்களது விண்ணப்பத்தில் தானாக பூர்த்தி ஆகும். நீங்கள் மீதமுள்ள பகுதிகளை மட்டும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதுமானது. எனவே நீங்கள் மேற்கூறிய அடிப்படைத் தகவல்களை இதில் பதிவு செய்யும் பொழுது மிகுந்த கவனமாகச் செய்ய வேண்டும். தவறு இழைத்தால், அதனைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது. உங்களது தவறான தகவல்களை எடிட் செய்ய முடியாது. இதனால், தேவையின்றி நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே உங்கள் தகவல்களை இதில் தட்டச்சு செய்து விட்டு எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சமர்ப்பிக்கவும் (SUBMIT). இந்த ஒரு முறை நிரந்தர பதிவு செய்ய ரூபாய் 150 கட்ட வேண்டும். மேலும் இதன் ஆயுட் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் ரூ. 150 பணம் கட்டி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதில் பயன்படுத்தப்படும் மின் அஞ்சல் முகவரி, அலைபேசி எண் மற்றும் முகவரி அனைத்தும் உங்களது சொந்தமாக இருக்க வேண்டும். கணினி மையத்தில் சென்று அவர்களது மின் அஞ்சல் மற்றும் அலைபேசி எண்களைக் கொண்டு பதியக் கூடாது. ஏன் என்றால், நீங்கள் தேர்ச்சி அடைந்தால், சான்றிதழ் சரிபார்ப்பு முதல், கலந்தாய்வு வரை இதில் உள்ள விபரங்களைக் கொண்டே தகவல் அனுப்புவார்கள். உங்களது ஒரு முறை நிரந்தர பதிவு, மற்றும் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை யாரேனும் உங்களுக்கு தெரியாமல் மாற்றினால் உங்களது அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்து சேரும். எனவே கவனம் தேவை. இறுதியில் உங்களது புகைப்படம், மற்றும் கையெழுத்து பதிவேற்றம் செய்யவேண்டும். இதற்க்கு சமீபத்திய புகைப்படத்தை பயன்படுத்துதல் நலம். பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படத்தின் கணினி அளவு: Photo Size – 3.5 cm x 4.5 cm (20 KB –50 KB) Signature Size – 3.5 cm x 1.5 cm ( 10KB – 20KB). புகைப்படத்தில், ஒரு முறை நிரந்தர பதிவிற்க்கான படி நிலைகளை பார்க்கவும்.
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: text
Image may contain: text
No automatic alt text available. நன்றி, அன்புள்ள அஜி சென்னை.

0 comments:

Post a Comment