Saturday, 4 November 2017

விஏஓ., குரூப்-4 தேர்வு, இனி ஒன்றாக நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி

Standard



குரூப் -04, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றாக நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.


தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4 க்கும் விண்ணப்பிக்கின்றனர். 10ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும்.

மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இந்த  தேர்வில் இனி  
 இனி கிராம நிர்வாகப் பகுதில் இருந்து கேள்விகள் கேட்கப் பட மாட்டாது.

இதற்க்கு CSSE-IV என்று, பெயரிட்டுள்ளது.

இதில் பொது தமிழில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவில் இருந்து 75 கேள்விகளும், கணக்கிலிருந்து 25 கேள்விகளும் கேட்கப் படும்.

தேர்வர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி , கடின உழைப்புடன் கூடிய வெற்றியைப்  பெற வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment