Friday, 17 November 2017

CCSE IV - FOR TYPEWRITING - BOTH HIGHER HOLDERS

Standard
வணக்கம், சகோதர சகோதரிகளே, சென்ற ஆகஸ்ட் 2017, தேர்வில் தட்டச்சு உயர்நிலை தேர்ச்சி அடைந்து, சான்றிதழுக்காக காத்துக் கொண்டு இருப்பவரா நீங்கள்? - உங்களுக்கு தான் இந்தப் பதிவு: கடந்த ஆகஸ்ட் 2017 ல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும், தட்டச்சு உயர்நிலையில் (HIGHER IN BOTH TAMIL AND ENGLISH) (அல்லது) ஏதாவது ஒன்றில் உயர்நிலை மற்றொன்றில் இளநிலை தேர்ச்சி அடைந்து இருந்தால், உங்களுக்கு தேர்வு முடிவு வந்து இருக்கும். ஆனால் தட்டச்சு முடித்த சான்றிதழ் (certificate) தமிழ்நாடு தொழில் கல்வி இயக்குனரிடம் (DIRECTOR OF TECHNICAL EDUCATION) இருந்து இன்னும் வந்து இருக்காது. எப்படியும், இன்னும் இரு வாரங்களுக்குள் உங்களுக்கு தட்டச்சு தேர்ச்சி அடைந்த சான்றிதழ் வந்து விடும், அதன் பின்னர் நீங்கள் CCSE-IV தேர்விற்கு விண்ணப்பம் செய்யலாம். அப்படி சான்றிதழ் வரவில்லை என்றாலும், ஒன்றும் பயப்படாத தேவை இல்லை. தட்டச்சருக்கான தகவலில், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி பகுதியில் உங்களுக்கு எந்த தேதியில் தட்டச்சருக்கான ரிசல்ட் வந்ததோ அந்தத் தேதியைக் குறிப்பிட வேண்டும். அந்த ரிசல்ட் வந்த தேதி உங்கள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ல் உங்களுக்கு சொன்ன தேதி அல்ல. DIRECTOR OF TECHNICAL EDUCATION WEBSITE (http://www.tndte.gov.in/site/) சென்று அதில் தேர்வு முடிவு வந்த தேதியை நன்றாக உறுதி செய்து அதனைப் போடவும். இந்த நாள் தான் சான்றிதழில் வரும், தட்டச்சு பயிற்சி நிலையத்தில் கொஞ்சம் முன்னே பின்னே சொல்ல வாய்ப்பு உண்டு. கண்டிப்பாக உங்கள் தட்டச்சர் சான்றிதழில் இதே தேதியை போட்டுத்தான் சீல் வைப்பார்கள். இப்போது உங்களுக்கு இருக்கும் மற்றொரு பிரச்சினை, தட்டச்சருக்கான சான்றிதழ் எண் இருக்காது. அதற்க்கு பதிலாக உங்கள் தட்டச்சர் தேர்விற்க்காக கொடுத்த பதிவு எண்ணை (EXAM REGISTER NUMBER) கொடுத்து விண்ணப்பிக்கலாம். ஒரு வேளை விண்ணப்பம் செய்ய கொடுக்கப்பட்டு இருக்கும் இறுதி நாளுக்குள் (DECEMBER 13, 2017), சான்றிதழ் வந்து விட்டால், நீங்கள் முன்னர் கொடுத்து இருந்த ரிஜிஸ்டர் எண்ணை எடிட் செய்து சான்றிதழ் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம். அப்படி இறுதி வரை சான்றிதழ் வரவில்லை என்றாலும் பெரிய பிரச்சினை இல்லை. உங்களுக்கு தேர்வு அறிவிப்பிற்கு முன்னர் ரிசல்ட் வந்து இருக்க வேண்டும், அது தான் முக்கியம், சான்றிதழ் தாமதம் ஆவதால் ஒன்றும் இல்லை.

தட்டச்சு தேர்வு முடிவு வந்த தேதி மட்டும் சான்றிதழில் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு தட்டச்சருக்கான ஒதுக்கீட்டில் வேலை கிடைக்க நல்ல வாய்ப்பு. இதனை சான்றிதழ் வந்தவுடன் உறுதி செய்து கொள்ளவும். இது வரை இல்லாத அளவு தட்டச்சருக்கு 3500 காலிப் பணியிடங்கள். எனவே தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உயர் நிலை (BOTH HIGHER) முடித்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற குரூப்-4 தேர்வில், இளநிலை உதவியாளருக்கும் , தட்டச்சருக்கும் உள்ள கட் ஆஃப் வேறு பாடு சரியான விடைகள்: 14 இளநிலை உதவியாளர்: 183 (FOR BC AND MBC) தட்டச்சர்: 169 (FOR BC AND MBC) இந்தக் கதை தெரிந்து, இப்பொழுது நிறைய பேர் தட்டச்சு பயின்று வருகின்றனர். எனவே அடுத்த தேர்வு முதல் தட்டச்சருக்கும் மிக கடினமான போட்டி வரக் கூடிய சூழ்நிலை வரும். போட்டி அதிகரிக்க, அதிகரிக்க இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சருக்கான கட் ஆஃப் வேறுபாடும் குறைய ஆரம்பிக்கும். எனவே, இந்த தேர்வில் முடிந்த வரை முயன்று தேர்ச்சி அடைவது சிறப்பு. நன்றி. அன்புள்ள அஜி சென்னை.








0 comments:

Post a Comment