Friday, 17 November 2017

CCSE IV - PSYCHOLOGICAL LOGIC

Standard
லாஜிக் 1 :
---------------

இந்த தேர்வு அறிவிப்பு கேள்விப் பட்ட உடனே, நமக்கான எக்ஸாம் இது, பாஸ் பண்ணுறோம், வேலைய வாங்கிட்டு போய்கிட்டே இருக்கோம் ன்னு உங்களுக்கு தோன்றியது என்றால், நீங்க நல்ல படிச்சு, புஃல் பாஃர்ம் ல இருக்கீங்கன்னு அர்த்தம்.

-- நீங்க பாஸ் பண்ணிடுவீங்க.


** கடைசி 90 நாட்களையும் கோட்டை விடாம, சமரசம் இல்லாம படிங்க.

** அதிலும் இறுதி 20 நாட்களை திருப்புதலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். புதிதாகப் படித்தால் கூடாது.


லாஜிக் 2:

--------------


இந்த தேர்வு அறிவிப்பு கேள்விப் பட்ட உடனே, பயமும்-குழப்பமும் உங்களுக்கு ஏற்பட்டுச்சுனா, நீங்க படிச்சு இருக்கீங்க, ஆனா முழு திருப்தியா படிக்கல, நிறைய டைம் தேவை இல்லாம வேஸ்ட் பண்ணி, கொஞ்சம் விளையாட்டுத் தனமா இருந்து இருக்கீங்கன்னு அர்த்தம்.


-- இந்த மூணு மாசத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு யூஸ் பண்ணி படிங்க.

** இந்த பொன்னான நாட்களையும் விளையாட்டு தனமா விட்றாதீங்க.


லாஜிக் 3:

--------------


இந்த தேர்வு அறிவிப்பை பார்த்த உடனே, சே, இவ்வளவு காலியிடங்களா?, நாம படிக்காம விட்டுட்டோமேன்னு நினச்சு வருத்தப்பட்டு இருந்தீங்கன்னா, நீங்க இனிமே தான் புக்க எடுக்க போறீங்கன்னு அர்த்தம்.


-- இப்போ ஆரம்பிக்கிற இந்த படிப்பை, விடாம தொடர்ந்துட்டு இருந்தா இந்தத் தேர்விலோ அல்லது கண்டிப்பா வரும் தேர்விலோ பாஸ் பண்ணிடுவீங்க.

இது முழுக்க முழுக்க என்னோட உளவியல் கணக்கு.

நன்றி.

அன்புள்ள
அஜி
சென்னை.

1 comment:

  1. Respected sir,
    I don't have degree certificate, But I have my provisional certificate . . .during certificatecverfication,whethet they ask for degree certificate or provisional is enough??? plzzz clarify me sir and 1 more thing I Dnt have cummulative mark sheet also

    ReplyDelete