Saturday, 4 November 2017

TNPSC தேர்வுகளில் பொதுத் தமிழ் நீக்கம்

Standard
TNPSC தேர்வுகளில் பொதுத் தமிழ் நீக்கம்: என்ற செய்தியினை கொண்ட இந்த வீடியோ 2013 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ஒளிப்பதிவு செய்யப் பட்டது. அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையில் ஆன அரசில் TNPSC தேர்வுகளில் பொதுத் தமிழை 50 ஆகக் குறைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=kzeBTo_y8ts
ஆனால், எதிர்க்க கட்சிகளின் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களின் விளைவாக இந்த முயற்சி கைவிடப்பட்டு மீண்டும் 100 தமிழ் கேள்விகள் என்றே தேர்வுகள் தொடரும் என்றும் அறிவிக்கப் பட்டது. இந்த வீடியோ உண்மைதான், ஆனால் ரொம்ப ரொம்ப காலம் கடந்தது, எனக்கு தெரிந்து ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியிலும் யாரேனும் ஒருவர் இந்தப் பதிவினை ஏதாவது ஒரு முகநூல் குழு அல்லது வாட்ஸ்-அப் குழுவில் போட்டுக் கொண்டே இருக்கிறார். இதனால், பெரும்பாலான தேர்வர்கள் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்து, தொடர்ந்து இது பற்றிய சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். எனவே, இது பற்றிய விழிப்புணர்வு தேர்வர்களிடம் வரவேண்டும் என்பதற்க்காக, இந்த செய்தியினை என்றும் நம்ப வேண்டாம் என்றும், உங்களால் முடிந்த அளவிற்கு இந்த வீடியோ மற்றும் செய்தியினை ஷேர் செய்ய வேண்டும் என்றும் அன்புடனும், தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
அன்புள்ள அஜி சென்னை

0 comments:

Post a Comment