Sunday, 10 December 2017

HOW TO APPLY FOR TNPSC EXAM - A GUIDANCE ALBUM

Standard
தேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம்.
(பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாகப் படித்த பின்னர் விண்ணப்பிக்கவும்.)
வாழ்த்துக்கள்.

01. படத்தில் குறியீட்டுக் காட்டப்பட்டுள்ள இணைப்பில் செல்லவும்.




02. உங்கள் ஒருமுறை நிரந்தர பதிவின் (One Time Registratin Id) , பயனாளர் ஐடி (User id), கடவுச் சொல் (Password), மற்றும் ஆங்கில குறியீடை கொடுத்து உள்ளே செல்லவும்


03. ஏற்கனவே நிரந்தர பதிவு செய்து அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், குறிக்கப்பட்டுள்ள இணைப்பில் செல்ல வேண்டும். அல்லது அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், திருத்த முடிந்த தவறுகளைத் திருத்தி விட்டு விண்ணப்பம் செய்யவும்.



04. படத்தில், சிவப்பு பகுதிகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது. 

கருப்பு நிறத்தில் உள்ள பகுதிகளில் உள்ள தகவல்களை பொறுமையாக, எந்த எழுத்து தவறும் இன்றி கொடுக்கவும். 

இங்கு சொந்த மாவட்டம் என்பது, நீங்கள் பள்ளி பயின்ற மாவட்டமாகும். தந்தையின் சொந்த மாவட்டம் என்பது அவர் பிறந்த ஊர். இதற்க்கு எல்லாம் சான்றிதழ் சரி பார்ப்பில் 
அத்தாட்சி (Proof) கேட்க மாட்டார்கள். எனவே கவலை வேண்டாம்.




05. உங்களது தற்போதைய இருப்பிட முகவரி, மற்றும் நிரந்தர முகவரியைக் கொடுக்கவும். இது முக்கியம், நீங்கள் தற்காலிகமாக தங்கி இருக்கும் முகவரிகளைக் கொடுக்க வேண்டாம். நீங்கள் தேர்ச்சி பெற்றால் தகவல் தொடர்பிற்கு இந்த முகவரிகள் உதவும். எனவே நீங்கள் நன்கு தீர்மானித்து முகவரிகளைக் கொடுக்கவும்.

மின் அஞ்சல், அலைபேசி எண், ஆகியவை உங்கள் சொந்த பயன்பாட்டில் உள்ளவையாக இருக்க விடும். அவை நிரந்தர பதிவில் இருந்து தானாக வந்து விடும், விண்ணப்பத்தில் அதனை மாற்றம் செய்ய முடியாது.

மாற்ற வேண்டுமெனில் முதலில் நிரந்தர பதிவில் மின் அஞ்சல் மற்றும், அலைபேசி எண் தகவல்களை மாற்றி விட்டு பின்னர் விண்ணப்பம் செய்யவும்.

கம்ப்யூட்டர் சென்டர் க்கு சொந்தமான விபரங்களைக் கொடுக்க வேண்டாம்.

உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பம் நிரந்தர பதிவில் இருந்து தானாக வந்து விடும். இரண்டும் அதற்க்கு உண்டான இடத்தில உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

புகைப்படம் உள்ள இடத்தில கையொப்பமும், கையொப்பம் உள்ள இடத்தில புகைப்படமும் மாறி இருந்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

எனவே அவற்றை பதிவேற்றம் செய்யும் போது கவனம் தேவை.


06.

1). SSLC,
2). HSC,
3). ITI (TWO YEARS COURSE),


07.

4). TECHER TRAINING (TWO YEARS
5).COURSE), DIPLOMO (THREE YEARS
6). COURSE) BACHELOR DEGREE,
7). MASTER DEGREE


08). ஒருங்கிணைந்த ஆய்ந்தாண்டு, மு்துகலைப் பட்டம் (BL), (MSC FIVE YEARS INTEGRATED COURSE)
9). M.Phil
10). Ph.d

என நீங்கள் படித்துத் தேறிய பாடங்களுக்கு உண்டான தகவல்களைக் கொடுக்கவும்.

இவை உங்களுக்கு, தரநிலை மூப்பிற்கு (RANK SENIORITY) உதவும்.



09.

I) SSLC QUALIFICATION:
--------------------------------------

1.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி (சான்றிதழில் குறியிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள தேதி. )

2. தேர்வுக்கு குழும பல்கலைக் கழகம்: படத்தில் குறியிடப்பட்டுள்ள இடத்தில உள்ள வாரியத்தின் பெயரினைக் குறிப்பிட வேண்டும்

3. சான்றிதழ் எண்: படத்தில் குறியீட்டு காட்டப்பட்டுள்ள எண்.

4. தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து இருந்தால் "ஆம்", எனவும் இல்லை என்றால் "இல்லை" எனவும் கொடுக்கவும்.

(உங்கள் சான்றிதழில் தமிழ் பாடம் மற்றும் அதன் மதிப்பெண் இருந்தால் "ஆம்" என்று கொடுக்கவும்)

5. பயிற்று மொழி: தமிழில் படித்து இருந்தால் தமிழ் , ஆங்கிலத்தில் படித்து இருந்தால் ஆங்கிலம்.

(குறிப்பு: குரூப் -2, மற்றும் 2A தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருந்து PSTM சர்டிபிகேட் வாங்கி வைத்து இருந்தால் அது உதவாது.

இந்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் என்பது குரூப்-4 மற்றும் VAO க்கு மட்டும் உதவும்.

குரூப்-1, குரூப்-2 மற்றும் 2A விற்கு பட்டப்படிப்பு (Degree) தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும், பத்தாம் வகுப்பு அல்ல)

குறிப்பு: தமிழை ஒரு பாடமாக எடுத்துக் படிப்பது வேறு, தமிழ் வழியில் படிப்பது வேறு.

PSTM க்கு அடுத்த புகைப்படம் வரவும்.


10. (PSTM) அனைத்துப் பாடங்களையும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று:

SSLC படிப்பில் அனைத்துப் பாடங்களையும் தமிழ் வழியில் படித்து இருந்தால் அதற்க்கு உண்டான இட ஒதுக்கீட்டினைப் (20%) பெற விண்ணப்பிக்கலாம்.

அதற்க்கு, கீழ்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

TC, MARK SHEET, PSTM CERTIFICATE FOR NORMAL STUDENTS (OR)

PROVISIONAL CERTIFICATE, DEGREE CONVOCATION CERTIFICATE இது யாருக்கு என்றால் தேர்வு எழுத தேவையான SSLC க்கு இணையான படிப்பினைப் படித்தவர்களுக்கு மட்டும். இணையான படிப்பு என்பது என்ன என்பதனை தேர்வு நோட்டிபிகேஷன் ல் தேடினால் கிடைக்கும்.

தற்சமயம் பள்ளிகளில், SSLC மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழின் பின்புறம் தமிழ் வழியில் படித்துள்ளார் என சான்று அளித்து கையொப்பம் போட்டுக் கொடுக்கின்றனர். அல்லது சிலருக்கு மாற்றுச் சான்றிதழில் (TC) குறிப்பிடப் பட்டு இருக்கும். அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டுமே அச் சான்றிதழ்களை வைத்து PSTM-க்கு விண்ணப்பம் செய்வது நன்று.

இல்லையெனில், சான்றிதழை வாங்கி விண்ணப்பம் செய்வதே சிறந்தது.



11. PSTM CERTIFICATE MODEL:

SSLC படிப்பிற்கு PSTM சான்றிதல் வாங்க பயன்படுத்த வேண்டிய படிவம்.

இதனை தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுதே கையில் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீடு கிடைக்கும். தமிழ் வழியில் படித்து இருந்தாலும், விண்ணப்பத்தில் இல்லை என்று, குறிப்பிட்டு விட்டு பின்னர் சான்றிதழைக் கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வாங்கலாம், ஆனால் ஆங்கிலத்தில் வாங்குவது சிறந்தது. நமது சான்றிதழ்களில் ஆங்கிலப் பெயர்களே இருப்பதால், ஒப்பீடு எளிதாக இருக்கும். படத்தில் உள்ள TNPSC யால் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படிவத்திலேயே வாங்க வேண்டும்.



12. PSTM சான்றிதழை வாழ்வில் ஒரு முறை வாங்கினால் போதுமானது, அதனை வைத்து அனைத்துத் தேர்வுகளையும் எழுதிக் கொள்ளலாம். ஒவ்வொரு தேர்விற்கும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

பத்தாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு இரண்டையும் தமிழ் வழியில் பயின்று இருப்பவர்கள், இரண்டிற்கும் தனித் தனியாக சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

SSLC PSTM- CCSE - 4 (VAO, GROUP 04) தேர்வுகளுக்கும்,

DEGREE PSTM - GR 01, GR 02, GR 02A, ASST JAILOR, ASST. ENGINEER (BE PSTM) தேர்வுகளுக்கும்

உதவும்.


13.

II) HSC QUALIFICATION:
-------------------------------

1.தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி (சான்றிதழில் குறியிடப்பட்டுள்ள தேதி )

2. பயிற்று மொழி: தமிழில் படித்து இருந்தால் தமிழ் , ஆங்கிலத்தில் படித்து இருந்தால் ஆங்கிலம்.

(குறிப்பு: குரூப் -2, மற்றும் 2A தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்து இருந்து PSTM சர்டிபிகேட் வாங்கி வைத்து இருந்தால் அது உதவாது. இந்த பத்தாம் வகுப்பு PSTM சான்றிதழ் என்பது குரூப்-4 மற்றும் VAO க்கு மட்டும் உதவும்.

குரூப்-2 மற்றும் 2a விற்கு பட்டப்படிப்பு (Degree) தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும், பத்தாம் வகுப்பு அல்ல)

3. தேர்வுக்கு குழும பல்கலைக் கழகம்: படத்தில் குறியிடப்பட்டுள்ள இடத்தில உள்ள வாரியத்தின் பெயரினைக் குறிப்பிட வேண்டும்.

4. சான்றிதழ் எண்: படத்தில் குறியீட்டு காட்டப்பட்டுள்ள எண்.

5. தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து இருந்தால் "ஆம்", எனவும் இல்லை என்றால் "இல்லை" எனவும் கொடுக்கவும். (உங்கள் சான்றிதழில் தமிழ் பாடம் மற்றும் அதன் மதிப்பெண் இருந்தால் "ஆம்" என்று கொடுக்கவும்)

குறிப்பு: தமிழை ஒரு பாடமாக எடுத்துக் படிப்பது வேறு, தமிழ் வழியில் படிப்பது வேறு.



14. DEGREE QUALIFICATION: - Part 1
--------------------------------------

1. பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்கும் பொழுது Cumulative Mark sheet ஐ பயன்படுத்த வேண்டாம்.

2. கான்வோகேஷன் அல்லது புரவிசினல் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

3. உங்களிடம் கான்வோகேஷன் மற்றும் புரவிசினல் இந்த இரு சான்றிதழ்களில் எதன் ஒரிஜினல் இருக்கிறதோ அதனைப் பயன்படுத்தலாம்.

4. இரண்டிற்கும் ஒரிஜினல் இருப்பின் CONVOCATION சான்றிதழைப் பயன்படுத்தலாம். இது சிறந்தது

5. TNPSC- யில் CONVOCATION சான்றிதழுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

6. தற்சமயம் கையில் CONVOCATION சான்றிதழ் இல்லை என்றால், புரவிசெனல் சான்றிதழை வைத்து விண்ணப்பம் செய்யலாம். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பிற்குச் செல்வதற்குள் காணவொகேஷன் சான்றிதழ் வாங்கி கொண்டு செல்லவும்.






16. தொழில் நுட்பத் தகுதி
-------------------------------------------

தொழில் நுட்பத் தகுதியை பொறுத்தவரை, இந்த தேர்விற்கு தேவையான தொழில் நுட்பத் தகுதி என்பது, தட்டச்சர் (Typewriting) மற்றும் சுருக்கெழுத்து (Shorthand) இரண்டும் ஆகும்.

தட்டச்சர் முதுநிலை மட்டுமே பதிய முடியும், இளநிலை பதிவதற்கு அனுமதி கொடுக்கப்பட வில்லை. எனவே SENIOR TYPING DETAILS மட்டும் போட்டால் போதுமானது.

தட்டச்சர் தேர்வில், இளநிலை பயிலாமல் முதுநிலை நேரடியாக தேர்ச்சி அடைந்து இருந்தால் கவலை வேண்டாம். அது ஏற்றுக் கொள்ளப் படும்.

எனவே நீங்கள் SENIOR GRADE பதிந்தால் ஆப்ஷனில் உள்ள SENIOR GRADE என்பதை கவனமாக தேர்வு செய்து பதியவும்.




17. சிலர் அரசு அலுவலகத்தில் பகுதி நேர ஒப்பந்தப் பணியாளர்களாக (CONTRACT BASIS) வேலை செய்து கொண்டு இருப்பார்கள் . அவர்கள் மட்டும் முன் அனுபவம் பற்றிய பகுதிகளை நிரப்புதல் நலம்.

தனியார் துறையில் வேலை பார்த்தவர்கள், பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் இதனை நிரப்ப தேவை இல்லை.

அவ்வாறு நிரப்பினால், நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லும்போது அதற்கு என்று கேட்கக் கூடிய சான்றிதழ்களை உங்கள் மேலாளர் ஒப்பமிட்டு கொடுக்க வேண்டும் என்று கேட்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

Also you are not get any priority in Tnpsc exams through this experience.





18. வினாத் தாள்  தமிழா? ஆங்கிலமா?

என்று, உங்களுக்கு வினாத்தாள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்தப் பகுதியே முடிவு செய்யும். நீங்கள் பொதுத் தமிழ் நன்றாக படித்து விட்டு, இந்தப் பகுதில் ஆங்கிலம் + பொது அறிவு என்று பதிவு செய்துவிட்டால், உங்களுக்கு ஆங்கில வினாத் தாளே கொடுக்கப்படும். எனவே மிகுந்த கவனம் தேவை.





19. உறுதி மொழி:

உறுதிமொழி நான்கு மட்டும் தற்போது பணி புரிந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்க்கானது. மற்றவர்களுக்கு அது தேவை இல்லை.


20. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (BE) முடித்து இருப்பவர்களுக்கு,

கான்வோகேஷனில் சான்றிதழ் எண் பின்னால் இருக்கும். அதனைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். முகப்பில் உள்ள, உங்கள் பதிவு எண்ணைப் (Register number) போடக் கூடாது.

இதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால், புரவிசினல் சான்றிதழ் வைத்து விண்ணப்பிக்கவும்.




21. FOR ATTEMPT CASES
------------------------------------------

ஒன்றிற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வைத்து இருந்தால் (IF ATTEMPT CASE), அதனை நீங்கள் பயின்ற பல்கலைக்கழத்திடம் விண்ணப்பித்து ஒரே சான்றிதழாக மாற்றிக் கொள்ளலாம்.

இதனை பின்னால் செய்து கொள்ளுங்கள், ஏனெனில் தற்சயம் நேரமில்லை.

எனவே, இறுதியாக உள்ள சான்றிதழின் எண்ணையும், தேதியும் கொடுத்து விண்ணப்பிக்கலாம்.


22. இறுதியாக தேர்வுக்கு கட்டணத்தைக் கட்டி விண்ணப்பத்தினை நிறைவு செய்ய வேண்டும். தேர்வுக்கு கட்டணம், முடிந்த வரை ஆன்லைனில் கட்டுவது சிறப்பு, உங்களுக்கு உடனடியாக பணம் சென்று சேர்ந்து விட்டதா, இல்லையா என்று முடிவு தெரியும். வேறு வழி இல்லை எனில், அஞ்சல் அலுவலகம் மூலமாக கட்டலாம்.



23. VERY VERY IMPORTANT:

சரியாக கடைபிடிக்கவில்லை எனில், நீங்கள் தேர்ச்சி அடைந்தாலும், வேலை கிடைக்காது, சான்றிதழ் சரிபார்ப்பில் போது, நீங்கள் பரிதாபமாக வெளியேறக் கூடிய சூழ்நிலை உருவாக்கலாம்.

SC, ST பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் (Above 40%) தவிர மற்றவர்களுக்கு தேர்வுக்கு கட்டணச் சலுகை பயன்படுத்தியத்தில் சந்தேகம் இருந்தால், அதாவது, மூன்று முறை கட்டமின்றி தேர்வு எழுதி விட்டோமா? இல்லையா? என்று சந்தேகம் இருப்பின் தேர்வுக்கு கட்டணத்தை முழுமையாக கட்டி விண்ணப்பம் செய்வது சிறந்தது.
இது, சான்றிதழ் சரிபார்ப்பில் நாம் நிராகரிக்கப் படமால் இருக்க உதவும்.


24. இதுவரை தவறாக ஏதும் விண்ணப்பித்து இருப்பினும் கவலை இல்லை. TNPSC நேற்று எடிட் ஆப்சன் கொடுத்து உள்ளது. கவனமாக சரியானதை மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால், சில அடிப்படை விஷயங்களை மாற்ற முடியாது என்பதையும் நினைவில் கொள்க.


25. VERY VERY IMPORTANT UPDATE:

வெற்றிகரமாக விண்ணப்பம் செய்து முடித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தினை PDF ஆக SAVE செய்து கொண்டு, உங்கள் மின் அஞ்சலில் (MAIL), ஒரு பிரதியை (COPY) கவனமாக சேமித்து வைக்கவும்.

1. விண்ணப்பம் (APPLICATION)
2. ஹால் டிக்கெட் (ADMIT CARD)
3. தேர்வு முடிவு (RESULT)
4. சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம் (CERTIFICATE VERIFICATION MEMO) 4.
5. கலந்தாய்வு அழைப்பு கடிதம் (COUNSELLING MEMO)
6. கலந்தாய்வில் கொடுக்கப்படும் பணி நியமன ஆணை (JOB ORDER)

என்று அனைத்தையும், கீழ்கவண்டவாறு MAIL SUBJECT போட்டு சேமித்து வைக்கவும். இது பின்னாளில் உங்களுக்கு உதவும். இது மிக மிக முக்கியம்.


26. PLEASE SHARE IT FOR EVERY ONE.

யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.


ALL THE BEST

--------------- \\ THE END \\ ---------------



4 comments:

  1. sir i passed in grp 2a but convocation apply panala...ipo panalum dec month tan degree varum....cv apo reject paniduvangala sir pls reply

    ReplyDelete
  2. Anna be convocation certificate la number iruku

    But exam result date
    Edha podalam?

    ReplyDelete
  3. SIr,
    B.E result date yeppidi pakurathu??

    ReplyDelete
  4. Tnpsc tamil notes eruntha send pannunga sir

    ReplyDelete